செய்திகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் மற்றொரு உத்தரவு

Apr 2, 2025 - 12:54 PM -

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் மற்றொரு உத்தரவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களைக் கொண்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குறித்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (02) மீண்டும் பரிசீலிக்கப்பட்டபோது, ​​மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மொஹமட் லாஃபர் தாஹிர் மற்றும் கே.பி. பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்களால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களுடன் வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்வது தொடர்பாக நீதிமன்றத்தில் இணக்கம் எட்டப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Comments
0

MOST READ
01
02
03
04
05