Header Logo

செய்திகள்
பழுதடைந்த பழ விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு

Apr 2, 2025 - 01:40 PM -

0

பழுதடைந்த பழ விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு

பழுதடைந்த பழ விற்பனை காரணமாக நுகர்வோர் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. 

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது ,காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் பழங்கள் விற்பனை செய்யும் நிலையங்களில் இவ்வாறு பழுதடைந்த பழ வகைகள் விற்பனை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறிப்பாக வெள்ளரிப்பழம், வாழைப்பழம், மாம்பழம், திராட்சைப்பழம், கொய்யாப்பழம், பலாப்பழம், பப்பாசி மாதுளம் பழங்கள் ஆகியவை பழுதடைந்த நிலையிலும் பங்கஸ் தொற்று ஏற்பட்ட நிலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

இதனால் நுகர்வோர்கள் சுகாதார ரீதியாக பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொள்வதாக குற்றஞ்சாட்டுகின்றனர். 

கடந்த காலங்களில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸதீன் ஆலோசனைக்கமைய மேற்படி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் திடீர் களப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

மேலும் முறையற்ற வகையில் உணவு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் திடீர் களப் பரிசோதனையின் போது ஹோட்டல்கள், உணவகங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள் மற்றும் பழக்கடை போன்றனவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 

ஆனால் பொது சுகாதார பரிசோதகர்களின் திடீர் பரிசோதனை தொய்வின் காரணமாக இவ்வாறு  தற்போது பழுதடைந்த பழ விற்பனை அதிகரித்தள்ளதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

title