Header Logo

உலகம்
வரலாறு காணாத சரிவை நோக்கி உலக பங்குச்சந்தை

Apr 7, 2025 - 09:22 AM -

0

வரலாறு காணாத சரிவை நோக்கி உலக பங்குச்சந்தை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார். 

அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி, வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். அதேபோன்று பல்வேறு நாடுகளுக்கும் வரிவிதிப்பையே ட்ரம்ப் அறிவித்தார். 

ட்ரம்ப் வரிவிதிப்புக்கு எதிராக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சீனா ட்ரம்ப் வரிவிதிப்புக்கு எதிர் வரிவிதிப்பு நடவடிக்கையாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத கூடுதல் வரி விதித்தது. ட்ரம்ப் தொடங்கியுள்ள வர்த்தக போரால் உலக பங்குச்சந்தைகளில் கடுமையான சரிவு ஏற்படத் தொடங்கி உள்ளது. 

கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் எலான் மஸ்க் உள்ளிட்ட உலகின் முதல் 500 பணக்காரர்கள் ஒட்டுமொத்தமாக 208 பில்லியன் டொலர்களை இழந்தனர். 

இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று உலக பங்குச்சந்தைகளில் கடும் தாக்கம் இருந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் 1987இற்கு பின் நிகழும் மிகப்பெறிய பங்குச்சந்தை சரிவாக அமையும். ஏற்கனவே 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு இன்று பங்குச்சந்தை சரிவு கடுமையாக உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சிங்கப்பூரின் பங்குகள் இன்று சந்தை தொடக்கத்தில் ஏழு சதவீதத்திற்கும் மேலாக சரிந்தன. 

ஆசியா முழுவதும் சந்தைகள் சரிவைச் சந்தித்ததால், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு 281.84 புள்ளிகள் (7.37 சதவீதம்) சரிந்து 3,544.02 ஆக உள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title