Header Logo
SLIC
மலையகம்
‘கலிப்சோ’ ரயில் சேவை ஆரம்பம்

Apr 8, 2025 - 03:15 PM

‘கலிப்சோ’ ரயில் சேவை ஆரம்பம்
Mobitel Inner 1278
EDEX Inner

'கலிப்சோ' எனப்படும் சிறப்புப் பார்வை வசதிகள் கொண்ட தொடருந்து சேவையினை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நானுஓயா மற்றும் தெமோதர புகையிரத  நிலையங்களுக்கு இடையே இன்று (08) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

 

குறித்த தொடருந்து காலை 8.10 மணிக்கு நானுஓயாவிலிருந்து பயணிக்க உள்ளது.

 

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு நானுஓயா புகையிரத நிலைய வளாகத்திலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

 

இயற்கை அழகை ரசிக்கும் வகையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா ரயில் பெட்டிகளாக புனரமைக்கப்பட்டுள்ளன மேலும் உணவு, இசை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டுள்ளது.

 

தற்போது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், மலையக தொடருந்து பாதையின் அதிசயங்களை பார்த்து இரசிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக உள்ளனர்.

 

இதன் காரணமாகவே குறித்த ரயில் சேவையை ஆரம்பித்ததாகவும், தெமோதர வரை இயங்கும் ரயில் மீண்டும் பண்டாரவளை வரையிலும், பின்னர் தெமோதரையிலிருந்து பதுளை வரையிலும் இயக்கப்படும் என்றும், இதேபோல் விரைவில் மேலதிகமாக  'கலிப்சோ' ரயிலை சேவையில் இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறித்த ரயில் பயணித்த ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்த தெரிவித்தார்.


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278