Header Logo
SLIC
மலையகம்
மாபெரும் கும்பாபிஷேகம்

Apr 10, 2025 - 04:32 PM

மாபெரும் கும்பாபிஷேகம்
Mobitel Inner 1278
EDEX Inner


பூஜை நிகழ்வுகள் பிரதிஸ்டா பிரதம குரு  குருதாச மணி சிவஸ்ரீ இரா.சண்முக சுந்தர குருக்கள் தலைமையில் நடைபெற்றதுடன் ஆலய பிரதம குரு பரத்வாஜ தத்புருஷ சிவாச்சாரியார் சிவாகம கிரியா ஜோதி யோகராஜ கோமகன் குருக்கள் அவர்களின் தலைமையில் இன்று காலை 7 மணிக்கு யாகசாலையில் கணபதி வழிபாட்டுடன் கணபதி ஹோமம் புன்யாவாஜனம் நடைபெற்றது.

 

அதனைத் தொடர்ந்து சித்தர் முருகேஷ் மகரிஷி அவர்களுக்கு விசேட அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றதுடன் காயத்ரி பீடத்தில் உள்ள  சிவலிங்க பெருமானுக்கு அலங்கார தீர்த்த அபிஷேக தீப ஆராதனைகள் செய்யப்பட்டது.  

 

தொடர்ந்து பிரதான யாகசாலையில் கணபதி ஹோமம் புண்ணியாவாஜனம் பூர்ணாகுதி நடைபெற்று விமான கலசங்களுக்கான கும்ப நீர் அபிஷேகம் ஆராதனைகள் பக்தர்கள் புடை சூழ ஓம் நமச்சிவாய கோஷத்துடன் பக்தி மயமாக நடைபெற்றது.

 

தொடர்ந்து 108 பாணலிங்கங்களுக்கான பிரதான கும்பம் பக்தி பரவசத்துடன் பக்தர்களின் ஓம் நமச்சிவாய அரோகரா கோசங்களுடன் ஆலயத்தின் உள்வீதி வலம் வந்து இவ்வாலயத்தில் பிரதான லிங்கமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் எம்பெருமான்  சிவலிங்கேஸ்வரனுக்கு சுப வேளையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 

தொடர்ந்து இவ் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் 108 லிங்கங்களுக்கும் கும்ப நீர் அபிஷேகம் நடைபெற்று தீப ஆராதனைகள் நடைபெற்றதுடன் தச மங்கள தரிசன நிகழ்வு நடைபெற்று பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278