Header Logo
SLIC
மலையகம்
பங்குனி உத்திர முத்தேர் திருவிழா

Apr 11, 2025 - 10:33 AM

பங்குனி உத்திர முத்தேர் திருவிழா
Mobitel Inner 1278
EDEX Inner

கெலேகால அருள்மிகு ஸ்ரீ கதிரேஷன் சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திர இரதோற்சவ பெருவிழா ஏராளமான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் பக்தி பூர்வமாக நேற்று (10) இடம்பெற்றது.

ஆலயத்தில் 2025 ஆம் ஆண்டுக்காக வருடாந்த பங்குனி உத்திர முத்தேர் தேர் திருவிழா கடந்த 08 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

கடந்த 09 ஆம் திகதி புதன்கிழமை பால்குடம் பவனி மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் என்பன இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து நேற்று ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று வசந்த மண்டபத்திலே விநாயகப் பெருமான் முருகன் வள்ளி தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று மேள தாள வாத்தியங்கள் முழங்க மூன்று மூர்த்திகளும் உள்வீதி வலம் வந்து பிரதான வீதிகள் ஊடாக நுவரெலியா நகரில் வெளி வீதி எழுந்தருளி தனித்தனி தேரிலே ஏறி முத்தேர் பவனியாக இரதோற்சவம் இடம்பெற்றது.

இவ் பூஜைகள் அனைத்தும் குருசுவாமி பிரம்மஸ்ரீ தயாளன் குருக்கள் அவர்களின் புதல்வன் இளம்சுடர் நித்தியலங்கார பூசனம் பிரம்மஸ்ரீ த. சுதன்சர்மா ஆலய பிரதம குரு தலைமையில் ஆகம சாஸ்திர முறைபடி நடைபெற்றது.

பொதுமக்கள், ஆலய நிர்வாகிகள், உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கான மக்கள் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278