Header Logo
SLIC
மலையகம்
நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞன் மாயம்

Apr 18, 2025 - 03:03 PM

நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞன் மாயம்
Mobitel Inner 1278
EDEX Inner

நாவலப்பிட்டி கலபட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். 

நாவலப்பிட்டி வெஸ்டோல் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் ஜாக்சன் என்ற 20 வயது இளைஞரே காணாமல் போயுள்ளார். 

காணாமல் போன இளைஞர், அவரது நான்கு நண்பர்களுடன், நேற்று (17) காலை கலபட நீர்வீழ்ச்சிக்கு கட்டுப்பாட்டாளர்களுக்கு தெரிவிக்காமலும், பிரதான நுழைவாயிலில் பற்றுச்சீட்டுக்களைப் பெறாமலும் சென்றுள்ளார். 

மேலும், நீர்வீழ்ச்சிக்கு மேலே உள்ள காட்டின் வழியாக சட்டவிரோதமாக நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர். 

காணாமல் போன இளைஞன் கொழும்பில் வேலை செய்பவர் எனவும் புத்தாண்டு விடுமுறைக்காக வீடு திரும்பியிருந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விடுமுறையில் வந்தவர் தனது நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தபோது இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கலபட நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகித்து நீர்வீழ்ச்சியில் தேடுதல் நடவடிக்கையை மக்கள் முன்னெடுத்திருந்த போதிலும், அவர்களால் உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே சடலத்தைக் கண்டறிய கடற்படையினரின் உதவியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278