Header Logo
Vallibel FD
Selan Bank
ஏனையவை
தெரணவின் 20 வருட பயணம்...

Oct 13, 2025 - 05:15 PM

தெரணவின் 20 வருட பயணம்...
Mobitel Inner 1278

ஒக்டோபர் 11 ஆம் திகதி 2005 ஆம் ஆண்டில் ஆரம்பமான ஒரு அழகான பயணம் இது! 

ஆரம்பத்தில் மேல் மாகாணத்திற்கு மட்டும் 6 மணி நேர ஒளிபரப்பை ஆரம்பித்த தெரண, பின் தனது செய்தி ஒளிபரப்பை தொடங்கியது. இதன் அடுத்த கட்டம் தற்போது பல உச்சங்களை தொட்ட நிலையில் இன்று 24 மணிநேர தொலைக்காட்சி சேவையாக மக்கள் மனங்களில் முதல்வனாக நீங்காத இடம்பிடித்துள்ளமை ஒரு விசேட அம்சமாகும். 

தெரண ஊடக வலையமைப்பின் பணிகளும் சாதனைகளும் அளப்பரியது. 
 


2006 ஆம் ஆண்டில் தம்பதிவ, புத்தகயாவில் இருந்து தெரண தனது முதலாவது வரலாற்று நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பை ஆரம்பித்தது. 
 


இலங்கையில் இருந்து பொலிவூட் சென்ற ஜாக்குலின் பெர்னாண்டஸ், தெரிவு செய்யப்பட்ட மிஸ் ஸ்ரீலங்கா - மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் உத்தியோகபூர்வ ஊடக பங்காளியாகி, இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் முதல் தடவையாக 2006 இல் நேரடிப் போட்டியை நடத்திய பெருமை தெரணவுக்கே உரித்தாகும். 

2007 ஆம் ஆண்டில் குழந்தைகளின் திறமைகளை தேசிய அரங்கிற்கு கொண்டு வரும் சர்வதேச தரத்தின் முதல் மற்றும் மிகப்பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சியான 'தெரண லிட்டில் ஸ்டார்' ஆரம்பமானது. இன்று இலங்கையில் குழந்தைகளுக்கான மிக நீண்ட நாட்கள் தொடர்ந்து ஔிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக 'தெரண லிட்டில் ஸ்டார்' மாறியுள்ளது. 

பிரபல கலைஞர்கள் மற்றும் மூத்த கலைஞர்கள் கலந்து கொள்ளும் 'கலா கம' - தெரண கலை கிராம ஆண்டு விழாவை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியது தெரண. 

அதன் பின்னர், இலங்கையில் தமிழ் - சிங்கள புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளின் வரிசையில் புதிய மாற்றங்களை கொண்டுவந்ததும் நாமே. 

Miss Sri Lanka for Miss World இற்கான உத்தியோகபூர்வ ஊடக பங்காளியாக, Miss Sri Lanka for Miss Univers, Miss Sri Lanka for Miss World, Miss Sri Lanka for Miss earth மகுடங்களுக்கான இலங்கை அழகிகள் 17 பேரை தெரிவு செய்வதற்கான போட்டிகளை இதுவரை தெரண நடத்தியுள்ளது. 

இலங்கையில் மியூசிக் வீடியோ துறைக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரே விருது விழாவாக 'தெரண மியூசிக் வீடியோ விருதுகள்' அமைந்தன. இன்று வரை 'தெரண மியூசிக் வீடியோ விருதுகள்' 9 நிகழ்வுகளை நாம் நடத்தி முடித்துள்ளோம். 

தெரண ரியல் லீடர் நிகழ்ச்சியின் தொடக்கமானது, இலங்கையில் சாகச யதார்த்த நிகழ்ச்சிகளின் அறிமுகத்தைக் குறிக்கிறது. அதிலிருந்து பிறந்த தலைமைத்துவம் நிறைந்த இளைஞர்கள் இன்று தொழில் முனைவோர் துறையில் உயர் வல்லுனர்களாக உயர்ந்து வருகின்றனர். 

மேலும் 2008 இலங்கை இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் நட்சத்திரங்களின் வரிசையான ட்ரீம் ஸ்டார் அறிமுகம் செய்யப்பட்டது. 

தற்போது, சிறந்த பாடும் திறமையை வெளிப்படுத்தும் இளைஞர்களை சர்வதேச மட்டத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரே பாடல் நிகழ்ச்சியாக Derana Dream star மாறியுள்ளது. 

இன்று, Derana Dream star பிரமாண்டமான முறையில் நீண்ட காலமாக இளம் பாடகர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு ரியாலிட்டி நாமமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கலைத்துறையில் பல்வேறு நிகழ்வுகளை வடிவமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு தெரண ட்ரீம் ஸ்டார் பல வரப்பிரசாதங்களையும் வழங்கியுள்ளது. 

2009 இல் இளைஞர்களை நடன நட்சத்திரங்களாக்கும் சிட்டி ஆஃப் டான்ஸ் ஆரம்பிக்கப்பட்டது. ரியாலிட்டி மேடைக்கு நடனத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் நாங்களே. இன்று தெரண சிட்டி ஆஃப் டான்ஸ் 6 தொடர்களை நிறைவு செய்துள்ளது. 

இந்த வரிசையில் FM தெரண வானொலி நிலையத்தின் திறப்பு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. தொலைக்காட்சி போல் பார்க்கக்கூடிய வானொலியாக ஒளிபரப்பை நடாத்தும் முதல் வானொலி என்ற பெருமையை FM தெரண தனதாக்கியுள்ளது. 

மேலும் வானொலி அலைவரிசைகளில் மிகவும் பிரபலமான அலைவரிசையாகவும் FM தெரண மாறியுள்ளது. 

2010 இல் தெரணவின் 5 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கையில் முதன்முறையாக 24 மணிநேர தொடர்ச்சியான நேரடி இசை நிகழ்ச்சி அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கியது. 

இலங்கையில் முதன்முறையாக Marathon live என்பதை அறிமுகப்படுத்தியதும் தெரண நாங்களே!

 

 
2012 இல் தெரண திரைப்பட விருதுகள் தொடங்கப்பட்டது, இது உலகில் முதன்முறையாக ஒரு தொலைக்காட்சி நிலையத்தின் ஊடாக வழங்கப்படும் திரைப்பட விருது விழாவாக மாறியது. 

இன்று தெரண திரைப்பட விருதுகள் இலங்கை சினிமாவைப் போற்றும் ஒரு முக்கிய திரைப்பட விருது விழாவாக மாறியுள்ளது. 

 


2013 இல் 'மனிதாபிமானமே முதன்மையானது' என்ற தொனிப்பொருளில் மனுசத் தெரண தேசிய செயற்பாட்டினை தெரண ஊடக வலையமைப்பு ஆரம்பித்தது. மனிதாபிமானம் மற்றும் தேசிய நலனுக்காக செயல்படும் மனுசத் தெரணவுக்கு சர்வதேச விருதுகள் பல கிடைத்துள்ளன. 

மனுசத் தெரண ஊடாக இலங்கையிலுள்ள பெருமளவிலான மக்களுக்கு உதவ முடிந்தது. 

 

 

டிவி தெரணவில் ஒளிபரப்பான அத்தம்மா, Boys over flowers, ஸ்ரீ கௌதம சம்புத்த, அதிராஜா தர்மசோகா போன்ற பிரபலமான நிகழ்ச்சிகள் பல தரவுகளில் முதலிடத்தை பிடித்தன. 

2016 இல் தன்னலமற்று பல துறைகளில் நாட்டுக்காக சேவையாற்றிய பெருமைக்குரிய இலங்கை பெரியவர்கள் மற்றும் பிரபலங்களை Ada Derana Sri Lankan of the Year என பாராட்டவும் நாம் தயங்கவில்லை. 
 


2017 இல் 'சிது' தொலைக்காட்சி நாடகம் அதிகபட்ச தரவரிசை குறியீட்டை அடைந்ததன் மூலம் இலங்கையின் நம்பர் 1 தொலைக்காட்சி நாடகம் ஆனது. இஸ்கோலே, சங்கீதே, தெவனி இனிம ஆகியன இலங்கையின் தொலைக்காட்சி நாடக வரலாற்றில் புரட்சிகளை உருவாக்கிய முதல்நிலை தொலைக்காட்சி நாடகங்களாக மாறியுள்ளன. 

இலங்கையில் முதன்முறையாக, பாட்டு, நடனம் மற்றும் நடிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த தொலைக்காட்சி யதார்த்த அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொண்டுவர தெரண ஸ்டார் சிட்டியால் முடிந்தது. இது அதிக பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்ற வாராந்திர நிகழ்ச்சியாக மாறியது. 

இலங்கையின் மிகவும் விலை மதிக்கத்தக்க தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியாக தெரண டெல் ஸ்டுடியோ ஆனது. தெரண டெல் ஸ்டுடியோ ஒரு தரமான இசை நிகழ்ச்சியாகும், இது பார்வையாளர்களிடம் இருந்து அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. மா நொவன மாம, லேய சஹா லயா, ஸ்பர்ஷய போன்ற இசை நிகழ்ச்சிகள் இன்றும் பார்வையாளர்களின் இதயத்தைத் தொடும் இசை நிகழ்ச்சிகளாக மாறிவிட்டன. 

குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இலங்கையின் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை மூத்த தலைமுறையினருக்காக வழங்குவதன் மூலம் தெரண சிக்ஸ்டி பிளஸ் ஆரம்பிக்கப்பட்டது. 

 


360, வாதபிட்டிய, அலுத் பார்ளிமேந்துவ என இலங்கையில் அரசியல் நிகழ்ச்சிகள் வித்தியாசமான அடையாளத்துடன் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தன. 

குறுந்தொடர் நாடகம் என்ற கலையானது, பொதுத் தொலைக்காட்சிப் பார்வையாளர்களின் மகிழ்ச்சியின் புதிய பரிமாணங்களைத் தொட்டு இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இது ஒரு பிரபலமான குறுந்தொடர் தொலைகாட்சித் தொடராக இன்றும் பிரபலமாக உள்ளது. 

 



Slim people's award இல் தெரண தொடர்ந்து முதலிடத்தை பிடித்ததுடன், இலங்கையின் சர்வதேச தரம் பற்றிய ஒரே வர்த்தக நாமமாகவும் தெரண அடையாளம் காணப்படுகிறது. 

தெரண தயாரித்த வசந்தே மற்றும் ஆதர வசந்தே ஆகிய டெலி ஃபிலிம்கள், யூடியூப் சேனலில் அதிகம் பார்க்கப்பட்ட டெலிஃபிலிம்களாக அமைந்தன. 

இலங்கையில் எந்தவொரு ஊடக அலைவரிசைகளிலும் இல்லாத அளவு அதிக எண்ணிக்கையிலான சந்தாதாரர்களைக் (subscribers) கொண்ட யூடியூப் சேனலும் தெரணவிடமே உள்ளது. அது 5 Billion views, 5 Million subscribers களை கொண்டது. 

டி.வி.தெரண அதிக எண்ணிக்கையிலான தீம் பாடல்களை தயாரித்தது. தெரண மிஸ் ஸ்ரீலங்கா, தெரண மியூசிக் வீடியோ மற்றும் தெவனி இனிம, சங்கீதே, இஸ்கோலே, பொது போன்ற தொலைக்காட்சி நாடக பாடல்கள் அந்த வகையில் பிரபலத்தின் உச்சத்தில் உள்ளன. 

இலங்கை மக்களின் வாழ்வியலை எடுத்துக்கூறும் பல்ஸ், கெஸ்ம மற்றும் நாடி போன்ற மும்மொழி இணையத்தளங்களை தெரண டிஜிட்டல் உருவாக்கியது. 2022 ஆம் ஆண்டில், பல்ஸ் இணையதளம் சுமதி விருதுகளில் சமூக ஊடக வெளியில் அதன் படைப்புகளுக்காக ஒரு விருதைப் பெற்றது, மேலும் 2023 ஆம் ஆண்டில் கெஸ்ம சமூக ஊடகத்திற்காக சுமதி விருதுகளில் 3 விருதுகளை வென்றது. 

சர்வதேச பார்வையாளர்களுக்காக இலங்கையின் முதல் ஆங்கில அனிமேஷன் திரைப்படம் தற்போது மோகோ ஸ்டுடியோவால் தயாரிக்கப்படுகிறது. அது தான் Secret of moonstone. 

Mogo Studios என்பது இலங்கையின் மிகவும் விரிவான மற்றும் நம்பர் 1 விருது பெற்ற அனிமேஷன் ஸ்டுடியோ ஆகும். 

இன்று வரை நாடகங்களிலும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும், மத நிகழ்ச்சிகளிலும், போயா நேரடி நிகழ்ச்சிகளிலும், செய்திகளிலும் தெரண முதலிடமாகவும் மாறியுள்ளது. இலங்கை மக்களின் இதயங்களில் நம்பர் 1 அலைவரிசையாக தெரண மாறியுள்ளது. 
 


மேலும், எங்களுடைய படைப்பாற்றல், அர்ப்பணிப்பு மற்றும் குழுப்பணி ஆகியவற்றை நாங்கள் நம்புகிறோம். 

இவற்றை எல்லாவற்றையும் விட உங்களில் உள்ள உண்மையான மனிதாபிமானம் தான் இதற்கு காரணம். நீங்கள் தான் தெரண, நாங்கள் தான் நீங்கள் !!!

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

Mobitel 1278