Header Logo
SLIC
மலையகம்
74 வயது மூதாட்டி மீது பாலியல் பலாத்காரம்

Apr 23, 2025 - 04:23 PM

74 வயது மூதாட்டி மீது பாலியல் பலாத்காரம்
Mobitel Inner 1278
EDEX Inner

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் தோட்டபகுதியில் 74 வயது மூதாட்டி மீது 24 வயது இளைஞன் ஒருவர்  பாலியல் தொல்லை விளைவித்தமை தொடர்பில் போடைஸ் பிரதேச மக்கள் இனைந்து இன்று (23) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

 

குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தை நிலை நாட்டு, கைது செய் போதை குற்றவாளியை கைது செய், போதை பொருளை ஒழிப்போம் போன்ற பாதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

 

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த ஹட்டன் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்து சம்பவம் தொடர்பாக ஆராய்ந்த பின்னர் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

இந்த சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸாரிடம் தொடர்பு கொண்டு வினவியபோது,

 

சந்தேகத்தின் பெயரில் சந்தேக நபரை எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமரியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதவானினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்த உத்தரவு நேற்று (22) குறித்த சந்தேக நபரை ஹட்டன் பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 20 ஆம் திகதி குறித்த தோட்டபகுதியில் உள்ள இளைஞன் ஐஸ் போதைப்பொருள் பாவித்துவிட்டு தனிமையில் மூதாட்டி வீட்டில் இருந்த வேளையில் மூதாட்டியின் வீட்டு ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்த இளைஞன் மூதாட்டியை பாலியல் தொல்லைக்குட்படுத்தியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இதேவேளை பாதிக்கப்பட்ட 74 வயது மூதாட்டி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. 


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278