Aug 26, 2026 - 11:50 AM





மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் நேற்று (25) சக்தி வாய்ந்த குண்டு ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தாழங்குடா வேடர் குடியிருப்பு சமுர்த்தி வீதியில் வீடொன்றின் முற்றத்தில் வீட்டு உரிமையாளர் பயிர்ச் செய்கைக்காக நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த போது, சக்தி வாய்ந்த 81 ரக மோட்டார் கொண்டு மீட்கப்பட்டுள்ளது.
வீட்டு உரிமையாளர் காத்தான்குடி பொலிஸாருக்கு குறித்த குண்டு தொடர்பாக அறிவித்ததையடுத்து ஸ்தலத்துககு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
விடுதலைப் புலிகளின் காலத்தில் இக்குண்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






















