Header Logo
SLIC
மலையகம்
நாட்கூலி முறைமை இல்லாதொழிப்பதே நிரந்தர தீர்வாகும்

Apr 24, 2025 - 10:57 AM

நாட்கூலி முறைமை இல்லாதொழிப்பதே நிரந்தர தீர்வாகும்
Mobitel Inner 1278
EDEX Inner

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பானது நிரந்தர தீர்வாக அமையாது, மாறாக நாட்கூலி முறைமை இல்லாதொழிப்பதே நிரந்தர தீர்வாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

 

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட தோட்ட பிரதேசங்களில் உள்ளூராட்சி மன்றம் தேர்தல் பிரச்சார கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தலைமையில் டிக்கோயா, வனராஜா, போடைஸ், பட்டல்கள, கெர்கர்ஸ்வோல்ட், மோரா ஆகிய பகுதிகளில் நேற்று (23) இடம்பெற்றது.

 

இதன்போது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டு தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,

 

நாட்டின் ஜனாதிபதி தேர்தல் காலங்களில் மக்கள் மத்தியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். ஆனால் தற்போது அவர் வாக்குறுதிகளை மறந்து எதிர்கட்சி தலைவர் போன்று செயற்பட்டு வருகின்றார்.

 

ஐனாதிபதி தேர்தல் காலங்களில் தோட்ட தொழிலாளர்களுக்கு கணிசமான சம்பள அதிகரிப்பை வழங்குவதாக உறுதியாக அறிவித்ததுடன், வரவுசெலவு திட்ட வாசிப்பிலும் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அனைத்தையும் மறந்து தோட்டக் கம்பனிகளுடன் கலந்துரையாடி முடியுமான அளவு 1,700 ரூபாய் நாள் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக அறிக்கை விடுத்துள்ளார். இதனை ஏமாற்று நாடகம் என புரிந்துக்கொள்ள வேண்டும்.

 

நான் அமைச்சராக இருந்த காலப்பகுதிகளில் ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக என்னால் முடிந்தளவிலான வேலைகளை மக்கள் நலனுக்காக செய்திருந்திருந்தேன்.

 

தற்போது ஜானாதிபதியால் வரவுசெலவு திட்டத்தினூடாக மலையகப் பெருந்தோட்ட பகுதிகளுக்கான நிதி ஓதுக்கீட்டில் அநீதி இழைக்கப்பட்ட கண் துடைப்பாகவே காணப்படுகின்றது.

 

கடந்த வருடத்தில் நாங்கள் அரசாங்கத்தில் இருந்தபோது அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் பெருமளவிலான நிதி ஓதுக்கீடு மேற்கொண்டிருந்ததினை யாரும் மறந்துவிட முடியாது.

 

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பானது நிரந்தர தீர்வாக அமையாது, மாறாக நாட்கூலி முறைமை இல்லாதொழிப்பதே நிரந்தர தீர்வாகும் என தெரிவித்தார்.


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278