Header Logo
SLIC
மலையகம்
ஹட்டன் பகுதியை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு

Apr 27, 2025 - 11:11 AM

ஹட்டன் பகுதியை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு
Mobitel Inner 1278
EDEX Inner

புத்தளம் வேரகல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் எவ்வித முன் அறிவித்தலுமின்றி திறக்கப்பட்டமையினால் கதிர்காமம் மாணிக்க கங்கையில் நீர்மட்டம் அதிகரித்ததை தொடர்ந்து மாணிக்க கங்கையில் நீராடி கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் அடித்து சென்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (26) இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் புதிய வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து தனது நேர்த்திக்கடனுக்காக கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு சென்றிருந்த வேளை குறித்த நபர் மாணிக்க கங்கையில் நீராடி கொண்டிருந்த போதே நீரின் வேகம் அதிகரித்து நீரில் அடித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலமாக மீட்கப்பட்டவர் ஹட்டன் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 52 வயதுடைய  பழனி லோகேஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பொலிஸார் மற்றும் பொதுமக்களின் உதவியோடு மீட்கப்பட்ட சடலம் கதிர்காமம் பிரதேச வைத்தியசாலையில் இருந்து சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக அம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேத பரீசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கபட உள்ளதாக கதிர்காமம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278