Header Logo

விளையாட்டு
14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சாதனை

Apr 28, 2025 - 11:13 PM -

0

14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சாதனை

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர் என்ற மகத்தான சாதனையைப் படைத்து, கிரிக்கெட் உலகில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

2025 ஐபிஎல் தொடரில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், வெறும் 35 பந்துகளில் சதம் விளாசி, ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம் என்ற பெருமையைப் பெற்றார்.


ஐபிஎல் தொடரின் 47-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

 

அதன்படி முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்களைப் பெற்றது.   அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ஓட்டங்களை எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் தீக்ஷன 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 

இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - வைபவ் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர்.

 

தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராஜஸ்தான் அணியின் 14 வயது வீரர் வைபவ் 35 பந்தில் சதம் விளாசி அசத்தினார். 

 

அவர் 101 ஓட்டங்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆகி வெளியேறினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 166 ஓட்டங்கள் குவித்தது.

 

அடுத்த சிறிது நேரத்தில் ஜெய்ஸ்வால் அரை சதம் விளாசினார். அடுத்து வந்த நிதிஷ் ரானா 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

 

இதனை தொடர்ந்து ஜெய்ஸ்வாலுடன் அணித்தலைவர் ரியான் பராக் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

 

இறுதியில் ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 212 ஓட்டங்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

Comments
0

MOST READ

காணொளி
ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

தேவாலய சிலுவைப் பாதை!

தேவாலய சிலுவைப் பாதை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

title