Header Logo
SLIC
மலையகம்
நுவரெலியாவில் அனைத்து சபைகளையும் தமிழ் முற்போக்கு கூட்டணி கைப்பற்றும்

Apr 29, 2025 - 05:00 PM

நுவரெலியாவில் அனைத்து சபைகளையும் தமிழ் முற்போக்கு கூட்டணி கைப்பற்றும்
Mobitel Inner 1278
EDEX Inner

ஸ்தாபக தலைவர் வீ.கே.வெள்ளையனின் ஆசிர்வாதத்தோடும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் ஆளுமையோடு இம்முறே நுவரெலியா மாவடாடத்தில் அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியினை அமைப்போம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி பொதுச்செயலாளர் பழனிவேல் கல்யான குமார் தெரிவித்துள்ளார். 

இன்று (29) பொகவந்தலாவ வட்டாரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதன் போது மக்கள் மத்தியில் பேசிய பிரதி பொதுச்செயலாளர் தேர்தல் காலம் என்பதால் பல்வேறு கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். 

ஆனால் எமது மலையக மக்களுக்கு தெரியும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் யார் உணர்வு பூர்வமாக சேவை செய்தவர் எமது தலைவர் பழனி திகாம்பரம் என்பதனை மக்களால் மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது. 

மலையகத்திற்கு வீடமைப்பு திட்டம் முதல் கார்பட் வீதி, மலையகத்திற்கான அதிகார சபைகள் அனைத்தையும் கொண்டு வந்தது தமிழ் முற்போக்கு கூட்டணி என்பதனை ஏனைய கட்சிகள் பாராளுமன்றத்தில் கூட ஏற்றுக்கொண்டுயிருக்கிறது. 

இம்முறை இடம்பெறவிருக்கின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து சபைகளையும் நாம் கைபற்றி அபிவிருத்தி பணிகளை முன்னெடுபோம் என குறிப்பிட்டார்.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278