May 7, 2025 - 02:52 AM -
0
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
நுவரெலியா மாவட்டம் ஹட்டன் - டிக்கோயா நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
ஹட்டன் - டிக்கோயா நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP) - 2,606 வாக்குகள் - 6 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,372 வாக்குகள் - 5 உறுப்பினர்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) - 916 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
சுயாதீன குழு - 1 (IND1) - 304 வாக்குகள் -1 உறுப்பினர்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) -208 வாக்குகள் - 1 உறுப்பினர்