Header Logo

செய்திகள்
நீதிமன்றத்திலும் GovPay வசதி

May 15, 2025 - 01:42 PM -

0

நீதிமன்றத்திலும் GovPay வசதி

டிஜிட்டல் பணப் பரிவர்தனை முறைகள் மூலம் 'ஊழல்' எனப்படும் புற்றுநோயை சமூகத்திலிருந்து ஒழிக்க முடியும் என்று தலைமை நீதிபதியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான முர்து பெர்னாண்டோ தெரிவித்தார். 

உயர் நீதிமன்றத்தை 'GovPay' டிஜிட்டல் கட்டண தளத்துடன் இணைப்பதற்காக இன்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட போதே தலைமை நீதிபதி இவ்வாறு தெரிவித்தார். 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக 'GovPay' வசதி சமீபத்தில் தொடங்கப்பட்டது. 

இது 16 பிரதான அரச நிறுவனங்களில் பொது சேவைகளை அணுகும்போது இணைவழி ஊடாக பணம் செலுத்தும் முறைமையை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. 

www.govpay.lk என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் இந்தச் சேவையைப் பெற வாய்ப்பு உள்ளது. 

அதன்படி, இந்த செயல்முறையின் மற்றுமொரு கட்டம் இன்று (15) உயர் நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி ஜனாதிபதி சட்டத்தரணி முர்து பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் சட்ட வல்லுநர்கள், இலங்கை தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் Lanka Pay ஆகியவற்றின் அதிகாரிகளும் பங்கேற்றனர். 

அதற்கமைய, உயர் நீதிமன்றத்தின் பல்வேறு சேவைகளுக்கு நேரடியாக பணம் செலுத்திவந்த நிலையில், இதனூடாக இனிவரும் காலங்களில் இணைவழி ஊடாக பணம் செலுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது. 

வழக்கு தாக்கல் செய்வதற்கான கட்டணங்கள், சான்றளிக்கப்பட்ட நகல் கட்டணங்கள், இழப்பீடு, முறைப்பாட்டு தாக்கல் கட்டணம் மற்றும் பிரமாணப் பத்திரங்களுக்கான கட்டணங்கள் உள்ளிட்ட பல கட்டண பரிவர்த்தனைகளை இணைவழி ஊடாக செலுத்த உதவும்.

Comments
0

MOST READ

காணொளி
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

title