Header Logo

செய்திகள்
கெரண்டிஎல்ல பேருந்து விபத்து - கொத்மலை சென்ற மற்றுமொரு குழு

May 15, 2025 - 02:09 PM -

0

கெரண்டிஎல்ல பேருந்து விபத்து - கொத்மலை சென்ற மற்றுமொரு குழு

கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த 11ஆம் திகதி அதிகாலை விபத்துக்குள்ளான பேருந்தை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் குழு இன்று (15) ஆய்வு செய்தனர். 

பேருந்து தரித்து வைக்கப்பட்டுள்ள கொத்மலை பொலிஸ் நிலையத்திற்கு சென்று மேற்படி ஆய்வு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். 

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தை சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று இணைந்து இந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. 

இதற்கிடையில், விபத்துக்குள்ளான பேருந்தை நேற்று (14) கொத்மலை பொலிஸ் நிலையத்தில் வைத்து அரச பகுப்பாய்வாளர் ஆய்வு செய்தார். 

கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற இந்த பேருந்து விபத்தில் 23 பேர் உயிரிழந்ததோடு, காயமடைந்தவர்களில் 16 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள ஐந்து பேர் கொண்ட குழுவை பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமித்தார். 

மேலும், இது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

title