Header Logo
SLIC
மலையகம்
இனிவரும் காலம் மலையக மக்கள் வாழ்க்கையில் பொற்காலம்

May 16, 2025 - 10:32 AM

இனிவரும் காலம் மலையக மக்கள் வாழ்க்கையில் பொற்காலம்
Mobitel Inner 1278
EDEX Inner

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு இனிவரும் காலம் பொற்கலமாக அமையும் என பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். 

நேற்று (15) வியாழக்கிழமை கஹவத்தை பொரோனுவ நூறு ஏக்கர் பிரிவு தோட்டப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், எமது அரசாங்கத்தின் ஊடாக மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு மாத்திரமல்ல நாடளாவிய ரீதியில் எமது அரசாங்கத்தின் ஊடாக அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அதில் முதற்கட்டமாக மலையக பெருந்தோட்ட பகுதிகளில் 5700 தனி வீட்டுத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். 

எமது அரசாங்கம் பெருந்தோட்ட நிருவனங்களோடு கலந்துரையாடலை மேற்கொண்டு மலையக மக்களுக்கு பத்து பேர்ச் காணியினை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. 

எமது அரசாங்கத்தின் ஊடாக மலையக தமிழ் மக்களுக்கு எவ்வளவு அபிவிருத்தி திட்டங்களை இயலும் வரை முன்னெடுப்போம். இன்று சிலர் எமது அரசாங்கத்தை விமர்சித்து வருகிறார்கள். எம்மை விமர்சிப்பவர்களுக்கு ஒன்றை கூறுகிறோம், உங்களை போல் மக்களின் வரிப்பணத்தை வீன்விரயம் செய்து கொள்ளையடிக்கவில்லை. 

உங்களை போன்று நாங்கள் ஊழல்வாதியும் இல்லை. நாங்கள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மைகளை செய்து கொண்டு இருக்கிறோம். தோற்றுப்போன அரசியல்வாதிகள் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முயற்சித்து வருகிறார்கள். ஆகவே எமது மக்கள் ஒருபோதும் ஏமாறக்கூடாது அவ்வாறு நாம் ஏமாறும் போது எமது வாழ்க்கை படும் பாதாளத்திற்கு செல்லும். 

எமது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை என்பது முக்கியம். அது தொடர்பாக நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். அது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதற்கான திட்டத்தை தீட்டி வருகிறது. 

எமது சமூகத்தினருக்கான கெளரவத்தை எமது அரசாங்கம் வழங்கியுள்ளது. எமது மக்களுக்கான கெளரவத்தை இல்லாது செய்தவர்கள் இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விமர்சித்து வருகிறார்கள். அவர்களுக்கு மக்கள் சிறந்த பாடத்தை கற்பித்துள்ளார்கள். 

செப்டம்பர் மாதம் ஒரு ஜனாதிபதி வருவார் டிசம்பர் மாதம் ஒரு ஜனாதிபதி வருவார் என கூறி வருகிறார்கள். இந்த நாட்டில் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிதான் இடம்பெறும் அதனை எவராலும் மாற்றமுடியாது. எனவே, கனவு காண்பவர்கள் நன்றாக இன்பத்தை அனுபவித்து கொள்ளுங்கள்.


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278