May 27, 2025 - 05:23 PM -
0
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு கோட்டை உட்பட பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு கோட்டையிலிருந்து லோட்டஸ் வீதி வழியாக ஜனாதிபதி செயலகம் நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அவர்களின் பாதையைத் தடுக்க பொலிஸார் வீதித் தடைகளை அமைத்துள்ளனர்.
அதன்படி, அதனை அண்டியுள்ள வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

