Header Logo
SLIC
மலையகம்
சீரற்ற வானிலையால் 71 குடும்பங்களைச் சேர்ந்த 246 பேர் பாதிப்பு

May 29, 2025 - 10:49 AM

சீரற்ற வானிலையால் 71 குடும்பங்களைச் சேர்ந்த 246 பேர் பாதிப்பு
Mobitel Inner 1278
EDEX Inner

நாட்டில் நிலவும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் காற்று மற்றும் மழையுடன் கூடிய மோசமான வானிலை காரணமாகவும் ஏனைய அனர்த்தங்களால் இதுவரை 71 குடும்பங்களைச் சேர்ந்த 246 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 69 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார். 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் மழையுடன் பலத்த காற்று வீசுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

மழையுடனான வானிலை காணப்படுகின்ற நிலையில் இன்று (29) அதிகாலை முதல் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகின்றது குறிப்பாக நுவரெலியா - பதுளை, நுவரெலியா - கண்டி மற்றும் நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் பிலக்பூல் சந்தி, வெண்டிகோனர், பங்களாஹத்த, நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதி போன்ற இடங்களில் வழகைக்கு மாறாக அதிகளவான பனி மூட்டம் காணப்படுகின்றது. 

இதனால் சாரதிகளுக்கும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி கடும் பனிமூட்டம் நிலவுவதால் விபத்துக்களை தடுக்கும் நோக்கில் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் வாகனங்கள் செலுத்தும் போது தங்களுக்கு உரியத்தான பக்கத்தில் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் போக்குவரத்து பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278