Header Logo
SLIC
மலையகம்
நானுஓயா - சமர்செட் , லேங்டல் தோட்டத்தில் மண்சரிவு: 120 பேர் இடம்பெயர்வு

May 31, 2025 - 11:51 AM

நானுஓயா - சமர்செட் , லேங்டல் தோட்டத்தில் மண்சரிவு: 120 பேர்  இடம்பெயர்வு
Mobitel Inner 1278
EDEX Inner

நானுஓயா - சமர்செட், லேங்டல் தோட்டத்தில் நேற்று (30) அதிகாலை தொடர் லயன் குடியிருப்பில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக அப்பகுதியில் வசிக்கும் 28 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இவர்கள் தற்காலிகமாக நானுஓயா கார்லபேக் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேற்படி தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு உலர் உணவு பொருட்களை நுவரெலியா பிரதேச செயலகம் ,மாவட்ட செயலகம் மற்றும் தோட்ட நிர்வாகத்தினர் இணைந்து வழங்கி வருகின்றன. 

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவும் ஒவ்வொரு முறையும் நானுஓயா - சமர்செட், லேங்டல் தோட்டத்தில் வாழும் மக்கள் பாதித்து வருவதாகவும் மேலும் இந்த பகுதி மக்கள் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இவ் மண்சரிவு அபாயத்திற்கு உள்ளாக்கியிருந்த போதிலும் தற்போது காணப்படும் மழை காலங்களில் மாத்திரம் தற்காலிக முகாம்களுக்கு செல்வதும், பின்பு காலநிலை வழமைக்கு திரும்பிய பின் வீடுகளுக்கு செல்வதுமாகவே வழமையாக கொண்டுள்ளோம். 

இப்போதும் குறித்து மண்சரிவினால் சில வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 

எனவே, இனி வரும் நாட்களில் சரி பாதிக்கப்பட்ட தங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பாதிக்கப்பட்ட இவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

More Images
more-images
more-images
more-images

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278