Header Logo
SLIC
ஜோதிடம்
இன்றைய ராசிப்பலன் (01.6.2025)

Jun 1, 2025 - 06:52 AM

இன்றைய ராசிப்பலன் (01.6.2025)
Mobitel Inner 1278
EDEX Inner

இன்று (01) வளர்பிறை சஷ்டி உள்ளது. இன்று சந்திர பகவான் ஆட்சி பெற்ற கடக ராசியில் சஞ்சரிக்க உள்ளார். சித்த யோகம் கூடிய இன்றைய நாளில், தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம் நிறைந்துள்ளது. அதனால் தனுசு எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்கவும். எந்தெண்டஹ் ராசிகள் முதலீடுகளை தவிர்க்க வேண்டும், நிதி விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் போன்ற விவரங்களை தெரிந்து கொள்வோம்.

 

மேஷம்

 

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். யோகா போன்ற உடற்பயிற்சிகளை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக பணம் செலவிடுவீர்கள். எந்த ஒரு பரிவர்த்தனையிலும் கவனமாக இருங்கள். இல்லையெனில் யாராவது உங்களை ஏமாற்ற வாய்ப்புள்ளது.

 

ரிஷபம்

 

இன்று உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும். காதல் வாழ்க்கையில் இருப்பவர்கள் தங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஒரு ரொமான்டிக்கான நாளாக இது இருக்கும். ஆனால், உங்கள் துணை உங்களுடன் ஏதோ ஒரு விஷயத்தில் கோபமாக இருக்கலாம். உங்கள் பெற்றோர் உங்களுக்கு முழு ஆதரவு தருவார்கள். நீங்கள் தவறு செய்திருந்தால், உடனடியாக மன்னிப்பு கேட்கவும். புதிய திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் சகோதரர்களுடன் கலந்து ஆலோசிக்கவும்.

 

மிதுனம்

 

இன்று நீங்கள் எதையோ நினைத்து கவலைப்படுவீர்கள். அது தேவையற்றதாக இருக்கும். எரிச்சலும் உங்கள் இயல்பில் காணப்படும். இதனால் குடும்ப உறுப்பினர்கள் வருத்தப்படுவார்கள். எந்த விதமான வாக்குவாதங்களையும் தவிர்க்கவும். எந்த ஒரு மோசமான சூழ்நிலையிலும் பொறுமை காக்க வேண்டும். முன்பு கடன் வாங்கிய பணம் இருந்தால், அதை திருப்பிச் செலுத்த முடியும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த நாள் கொஞ்சம் பலவீனமாக இருக்கும்.

 

கடகம்

 

இன்று நீங்கள் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய நாள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால், மூத்த உறுப்பினர்களுடன் பேசலாம். பல வேலைகளைச் செய்வதை விட, முக்கியமான வேலைகளை முதலில் முடிக்க வேண்டும். உங்கள் உணவு பழக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் வயிற்றுப் பிரச்சனைகள் வரலாம். முக்கியமான வேலை காரணமாக திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

 

சிம்மம்

 

இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். கடந்த கால முடிவுகளை நினைத்து வருத்தப்படுவீர்கள். வேலையில் உள்ள பிரச்சனைகளை சமாளிக்க முடியும். உங்கள் எதிர்ப்பாளர்கள் உங்களை ஆதிக்கம் செலுத்த முயல்வார்கள். அதை நீங்கள் தவிர்க்க வேண்டும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பரை சந்திக்க நேரிடலாம். உங்கள் குழந்தைக்கு ஏதாவது பொறுப்பு கொடுத்தால், அதை அவர்கள் நிறைவேற்றுவார்கள்.

 

கன்னி

 

புதிய வேலைகளைத் தொடங்க இன்று ஒரு நல்ல நாள். வேலையில் அதிக வேலை செய்ய வேண்டியிருக்கும். ஆனால், உங்கள் பொறுப்புகளை சரியான நேரத்தில் முடித்து விடுவீர்கள். வங்கி துறையில் வேலை செய்பவர்கள் சேமிப்பு திட்டங்களில் கவனம் செலுத்துவார்கள். உங்கள் காதலருடன் எங்காவது வெளியே செல்ல திட்டமிடலாம். உங்கள் பெற்றோர் உங்களுக்கு ஏதாவது பொறுப்பு கொடுத்தால், அதை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் கோபப்படலாம்.

 

துலாம்

 

இன்று உங்களுக்கு செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். யாரிடமும் கடன் வாங்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். இல்லையென்றால் உங்கள் சேமிப்பு கரைந்துவிடும். உங்கள் வியாபார திட்டங்கள் முன்னேற்றம் அடைவதால் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆனால், சில செலவுகள் தவிர்க்க முடியாததாக இருக்கும். குடும்ப உறுப்பினர் ஒருவரின் உடல்நிலை சரியில்லாமல் போவதால் நீங்கள் அலைந்து திரிய வேண்டியிருக்கும்.

 

விருச்சிகம்

 

இன்று உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும். உங்கள் தாயின் உடல்நலப் பிரச்சினைகள் குறித்து கவலைப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால் கொஞ்சம் வருத்தப்படுவீர்கள். ஆனாலும் உங்கள் அன்றாட செலவுகளை சமாளிக்க முடியும். மாணவர்கள் ஏதாவது போட்டியில் கலந்து கொண்டிருந்தால், அதன் முடிவுகள் அறிவிக்கப்படலாம். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம். அதை நீங்கள் சரியான நேரத்தில் தீர்க்க வேண்டும்.

 

தனுசு

 

இன்று உங்களுக்கு சாதாரணமான நாளாக இருக்கும். எதிர்மறை எண்ணங்களை மனதில் கொண்டு வராமல் இருக்க முயற்சி செய்யுங்கள். இல்லையென்றால் கவலையாக இருப்பீர்கள். தொண்டு வேலைகளில் பங்கேற்பீர்கள். மாணவர்கள் தங்கள் கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குடும்ப உறுப்பினர்களிடம் பேச வேண்டும். காதல் வாழ்க்கையில் இருப்பவர்கள் தங்கள் துணையுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். இல்லையென்றால் அது நீண்ட நாட்களுக்கு நீடிக்கும். வியாபார விஷயங்களில் யாரையும் குருட்டுத்தனமாக நம்ப வேண்டாம்.

 

மகரம்

 

நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகளில் இருந்து இன்று உங்களுக்கு விடுதலை கிடைக்கும். நண்பர்களுடன் ஜாலியாக நேரம் செலவிடுவீர்கள். கூட்டு சேர்ந்து வேலை செய்ய திட்டமிடலாம். முக்கியமான விஷயங்களை உங்கள் பெற்றோருடன் கலந்து ஆலோசிக்கலாம். குடும்பத்தில் ஒருவருக்கு திருமணப் பேச்சு வார்த்தை நடப்பதால் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். குறுகிய தூர பயணங்கள் செல்ல திட்டமிடலாம்.

 

கும்பம்

 

வியாபாரம் செய்பவர்களுக்கு இன்று எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். வேலையில் சில பிரச்சனைகள் இருந்தால், அதில் இருந்து விடுதலை கிடைக்கும். ஆனால், யாரையும் நம்பி வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இல்லையென்றால் நஷ்டம் ஏற்படும். உங்கள் மாமியார் வீட்டில் யாருக்காவது பணம் கொடுக்க வேண்டியிருந்தால், உங்கள் துணையுடன் கலந்து ஆலோசித்த பிறகு கொடுங்கள். இல்லையென்றால் உறவில் விரிசல் ஏற்படலாம். குழந்தையின் எதிர்காலம் பற்றிய கவலைகள் நீங்கும்.

 

மீனம்

 

வியாபாரம் செய்பவர்களுக்கு இன்று ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். முதலீட்டுத் திட்டங்களை தள்ளி வைக்க வேண்டும். மற்ற வேலைகளில் கவனம் செலுத்துவதை விட, உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். குடும்ப உறுப்பினர்களுடன் உட்கார்ந்து பிரச்சனைகளை பற்றி பேச வேண்டும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். இல்லையென்றால் அது பிரச்சனையாகலாம்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278