Header Logo
SLIC
ஜோதிடம்
எந்த எண்ணுக்கு சிக்கல்?

Jun 2, 2025 - 01:18 PM

எந்த எண்ணுக்கு சிக்கல்?
Mobitel Inner 1278
EDEX Inner

ஜூன் 2025 வருடத்திற்க்கான நியூமராலஜி (எண் கணித) கணிப்புகள் வந்துவிட்டன. ஒவ்வொரு எண்ணுக்கும் என்ன பலன்? எந்த எண்ணுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? எந்த எண்ணின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்? எந்த எண்ணுக்கும் பண வரவு அதிகரிக்கும்? என சற்று விரிவாக இங்கு காண்போம்.

 

எண் 1

 

ஜூன் 2025 உங்களுக்கு ஒரு முன்னேற்ற பாதையாக அமையக்கூடும். அதாவது, வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்வதற்கான பாதைகள் இந்த மாதத்தில் தென்படும். பொருளாதார விஷயங்கள் நல்லபடியாக இருக்கும், நிதி நெருக்கடிகள் குறையும், பண வரவு அதிகரிக்கும், தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஓய்வின்றி உழைக்கும் அளவிற்கும் வியாபாரம் பெருகும், இதனால் அலைச்சல், சலிப்பு இயல்பான ஒன்றாக இருக்க கூடும். எந்த ஒரு புது விஷயத்தை துவங்கும் முன்னரும் கவனமாக சிந்தித்து முடிவு எடுப்பது நல்லது; குறிப்பாக ஒப்பந்தங்கள், சொத்து - பத்திர பதிவு சார்ந்த விஷயங்களில் கவனமாக சிந்தித்து முடிவு செய்வது நல்லது. காதல் உறவு இனிமையாக இருக்கும், இருப்பினும் மாதத்தின் இறுதி நாட்களில் சில பிரச்சனைகள் வந்து செல்ல கூடும். எனவே, எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

 

எண் 2

 

பணியிடத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்; உங்கள் திறமைகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். இல்லறத்தில் கருத்து வேறுபாடுகள் குறைந்து மகிழ்ச்சி பெருகும். பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள் சாதகமாக இருக்கும், முதலீட்டுக்கு ஏற்ற லாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். காதல் உறவில் இன்பம் நீடிக்கும், எதிர்காலம் சார்ந்த திட்டங்களை குறித்து அவ்வப்போது ஆலோசிப்பீர்கள். உறவில் உண்டாகும் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண்பது நல்லது.

 

எண் 3

 

நியூமராலஜி எண் 3 கொண்டவர்களுக்கு இம்மாதம் காதல் வாழ்க்கையில் பிரகாசமாக இருக்கும். உறவுக்குள் மகிழ்ச்சி பெருகும், நீங்கள் நினைத்தப்படி காரியங்கள் நடக்கும். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் படிப்படியாக முன்னேற்றம் காண்பீர்கள். பணியிடத்தில் தனிமையாக இருப்பது போல் உணரலாம். எதிர்பாராமல் செய்யும் சிறு தவறுகள், மன கஷ்டங்களுக்கு காரணமாகும். நீதிமன்றம் சார்ந்த வழக்குகள், வழக்கின் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. ஜூன் மாதத்தின் இறுதியில் இந்த நிலை மாறும், உங்கள் தனிப்பட்ட திறமைகள் இதற்கு உதவியாக இருக்கும்.

 

எண் 4

 

நியூமராலஜி 4 கொண்டவர்கள் இந்த ஜூன் மாதத்தில், தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். பணியிடத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் அளிக்கும். காதல் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும், உறவை வலுப்படுத்த வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் பண வரவு அதிகரிக்கும். இந்த மாதம் நீங்கள் செய்யும் முதலீடுகள், நீண்ட கால பலன அளிக்க கூடும். மாதத்தின் இறுதியில் மன கஷ்டங்கள் ஏற்படலாம், தனிமையில் நேரத்தை கழிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட கூடும். எனவே, எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

 

எண் 5

 

பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும், இதுநாள் வரை நீங்கள் செய்த முதலீடுகள் நல்ல பலனை அளிக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு, பாராட்டுகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் சார்ந்த முக்கிய முடிவுகளில் கவனம் செலுத்துவதன் மூலம், வெற்றியை காணலாம். காதல் உறவில் பிரச்சனைகள் சில வந்து செல்லலாம். மாதத்தின் இறுதியில் சுமுகமான சூழ்நிலை உண்டாகும்.

 

எண் 6

 

6-வது மாதமான ஜூன் மாதம், நியூமராலஜி எண் 6 கொண்டவர்களுக்கு சாதகமான மாதம் ஆகும். குறிப்பாக சிங்கிளாக (Single) இருக்கும் நபர்களுக்கு திருமணம் நடக்கும் வாய்ப்பு அதிகம். நண்பர்களின் திருமண நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு அதிகரிக்கும். திருமணம் முடித்தவர்கள், குழந்தை பாக்கியம் தொடர்பான நற்செய்திகளை எதிர்பார்க்கலாம். தொழில் வளர்ச்சிக்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும், முதலீடுகள் போதுமான லாபத்தை ஈட்டித் தரும். பணியிடத்தில் ஒரு சில சங்கடமான நிகழ்வுகள் நிகழலாம், இதனால் மன கஷ்டங்கள் ஏற்படலாம். ஜூன் மாத இறுதியில் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் நிகழும், எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாய் அமையும்.

 

எண் 7

 

நியூமராலஜி எண் 7 கொண்டவர்களுக்கு இந்த ஜூன் மாதம், நிதி உதவி செய்யும் மாதமாக அமையும். முதலீடுகள் நல்ல லாபத்தை ஈட்டித் தரும், பணியிடத்தில் பதவி உயர்வு, பாராட்டுதல்கள் பெறலாம். கையில் எடுத்த காரியங்கள் தடையின்றி விரைவில் செய்து முடிப்பீர்கள். காதல் உறவில் கருத்து வேறுபாடுகள் வரலாம் அல்லது இடைவெளி அதிகரிக்கலாம். இருப்பினும் இந்த இடைவெளி, விரைவில் முடிவுக்கு வரும். மாதத்தின் இறுதியில் குருவின் ஆசிர்வாதத்தால், வாழ்க்கையில் சந்தோஷம் பெருகும், மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.

 

எண் 8

 

இந்த ஜூன் மாதம், உங்கள் காதல் வாழ்க்கைக்கு சாதகமான சூழ்நிலைகளை உண்டாக்கி தரும். காதலர்கள் இடையே பரஸ்பர புரிதல் அதிகரிக்கும். பணியிடத்தில் முன்னேற்றம் காண்பீர்கள், பதவி உயர்வு மற்றும் பாராட்டுதல்கள் பெறலாம். இருப்பினும், ஒரு சில சூழ்நிலைகள் உங்களுக்கு பாதகமான சூழ்நிலையை உண்டாக்கலாம். மேலதிகாரிகள், உங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம். இதன் விளைவாக, சுதந்திரமாக பணி செய்வது சிரமமாகும். தொழில் விவகாரங்களில் கவனமாக முதலீடு செய்வது நல்லது, புதிய ஒப்பதங்களை தவிர்ப்பது நல்லது. மாதம் இறுதியில் சூழ்நிலை மாறும், சுமுகமான சூழல் உண்டாகும்.

 

எண் 9

 

நியூமராலஜி எண் 9 கொண்டவர்களின் காதல் வாழ்க்கை இந்த ஜூன் மாதத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் துணை உங்கள் மீது அதிக அக்கறை காட்டுவார், உறவை வலுப்படுத்த தேவையான காரியங்களில் ஆர்வம் காட்டுவார். பணியிடத்தில் பிரச்சனைகள் வந்து செல்லும், இருப்பினும் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த பிரச்சனைகளை சமாளிக்கலாம். பொருளாதார விஷயங்களில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும், காரணம் இவை நஷ்டங்களை அளிக்கலாம். மாத இறுதியில் சூழ்நிலைகள் மாறும், எல்லாம் உங்களுக்கு சாதகமாய் மாறும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278