Header Logo

மலையகம்
நுவரெலியாவில் சீரற்ற வானிலை - பொது மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை

Jun 13, 2025 - 03:58 PM -

0

நுவரெலியாவில் சீரற்ற வானிலை - பொது மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையால் நுவரெலியா பதுளை பிரதான வீதியின் மாநகரசபை மைதானத்திற்கு அருகாமையில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இந்த சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர் . 

மரம் முறிந்து விழுந்த சந்தர்ப்பத்தில் ஒரு மருங்கில் மாத்திரம் போக்குவரத்து இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. 

இந்நிலையில் பிரதேச வாசிகளுடன் நுவரெலியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் இணைந்து முறிந்து வீழ்ந்துள்ள மரத்தை உடனடியாக வெட்டி அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர். 

அதன் பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதனால் வாகனங்களை சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செலுத்த வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

தொடர்ச்சியாக நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. 

இதனால் ஏராளமான இடங்களில் மரங்கள் மற்றும் மரக்கிளைகள், மின்கம்பிகள் மீது விழும் சம்பவம் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகின்றது. 

அத்துடன் நுவரெலியா – ஹற்றன் பிரதான வீதியில் நானுஓயா பகுதியில் கற்பாறைகளுடன் மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வீதி சேதமடைந்து காணப்படுவதால் மண்சரிவு சமிக்ஞைகள் வீதியோரத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. 

எனவே இவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் அவதானமாக இருக்குமாறு நானுஓயா போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

--

MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!