Header Logo
SLIC
மலையகம்
சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் சத்தியப்பிரமான நிகழ்வு

Jun 16, 2025 - 11:27 AM

சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் சத்தியப்பிரமான நிகழ்வு
Mobitel Inner 1278
EDEX Inner

சந்திரசேகரன் மக்கள் முன்னணி சார்பாக நுவரெலியா மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமான நிகழ்வு நேற்று (15) தலவாக்கலையில் அமைந்துள்ள சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.

சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் முன்னிலையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்திருந்தனர்.

கொட்டகலை பிரதேச சபைக்காக சிவசாமி பத்மநாதன், அகரபத்தனை பிரதேச சபைக்காக பாலகிருஷ்ணன் பிரதீப், நுவரெலியா பிரதேச சபைக்காக கனகசுந்தரம் லலித்குமார், நோர்வூட் பிரதேச சபைக்காக ஆறுமுகம் தியாகராஜா ஆகியோர் முன்னணியின் பொதுசெயலாளர் அனுஷா சந்திரசேகரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்திருந்தனர்.

சத்தியப்பிரமாண நிகழ்வின் பின்னர் எமது மலையக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும், பிரதேச சபைகள் ஊடாக எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்கக்கூடிய சேவைகளை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

எதிர்காலத்தில் எமது மலையக மக்களின் நலனை கருத்திற்கொண்டு மாத்திரம் உறுப்பினர்களின்  செயற்பாடுகள் தீர்மானங்கள் அமைய வேண்டும் எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இறுதியாக இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சந்திரசேகரன் மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி அனுஷா சந்திரசேகரனின் வழிகாட்டலில் நுவரெலியா மாவட்டத்தின் நான்கு சபைகளில் ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டு ஒவ்வொரு சபையிலும் தலா ஒருவர் வீதம் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278