Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
எம்பிலிபிட்டியவில் புதிய பஜாஜ் முச்சக்கர வண்டி முகவர் கிளையை திறந்து தனது சேவையை விரிவாக்கியது டேவிட் பீரிஸ் நிறுவனம்

Jun 17, 2025 - 12:45 PM

எம்பிலிபிட்டியவில் புதிய பஜாஜ் முச்சக்கர வண்டி முகவர் கிளையை திறந்து தனது சேவையை விரிவாக்கியது டேவிட் பீரிஸ் நிறுவனம்
Mobitel Inner 1278

டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி நிறுவனம் (DPMC) எம்பிலிபிட்டியவில் தனது புதிய பஜாஜ் முச்சக்கர வண்டி முகவர் கிளையை திறந்து வைத்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களுக்குப் பின்னர் நாட்டில் மீள ஆரம்பிக்கப்பட்ட வாகன இறக்குமதிக்குப் பின்னர் திறக்கப்படும் முதலாவது முகவர் கிளை இதுவென்பது குறிப்படத்தக்கது. புதிதாக திறக்கப்பட்ட இந்த கிளை மூலம், DPMC தனது சேவைகளை கொழும்புக்கு அப்பால் விரிவாக்கி, குறிப்பாக இலங்கையின் கிராமப்புறங்களுக்கு கட்டுப்படியான செலவிலான போக்குவரத்திற்கான தீர்வுகளை வழங்குவதில் முக்கியமான ஒரு படியை எடுத்துள்ளது. 

இது பற்றி, DPMC நிறுவனத்தின் வாகன விற்பனை பொது முகாமையாளர் நாலக குமாரசிங்க தெரிவிக்கையில். ஐந்து வருடங்களாக இலங்கை மக்கள் புதிய பஜாஜ் முச்சக்கர வண்டிகளை எதிர்பார்த்து காத்திருந்தனர். இன்று அந்த கனவு நனவாகியுள்ளது. கொழும்புக்கு அப்பால் எம்பிலிபிட்டிய போன்ற கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு இந்த வாகனத்தை எளிதாக கிடைக்கச் செய்வதற்காக இந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. நாம் நாடு முழுவதும் மேலும் பல முகவர் கிளைகளை எதிர்காலத்தில் திறக்க எதிர்பார்த்துள்ளோம். என்றார். 

புதிய பஜாஜ் முச்சக்கர வண்டி, பல்வேறு முன்னேற்றகரமான அம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளது. இதன் மூலம் அதன் செயற்பாடு, செயல்திறன், நம்பகத்தன்மை மேலும் மேம்படுகின்றது. புதிய 236.2cc EFI எஞ்சினுடன், BS6 சூழல் தரநிலைகளை பின்பற்றும் தன்மையுடன், குறிப்பாக குறைந்த காபனிரொட்சைட்டு வெளியேற்றம், அதிக எரிபொருள் சேமிப்பு ஆகியவற்றுடன் வாகனம் செலுத்துவதிலான சிறந்த அனுபவத்தை வழங்குகின்றது. மேம்பட்ட டேஷ்போர்ட் ஆனது செயற்பாடுகளை மேம்படுத்த உதவுகின்றது. இதிலுள்ள சௌகரியமான வசதிகள் காரணமாக தனிப்பட்ட பயன்பாட்டுக்கும், சிறிய வணிக செயற்பாடுகளுக்கும் உகந்ததாக காணப்படுகின்றது. 

பஜாஜ் முச்சக்கர வண்டிகள் இலங்கையில் மிக நீண்ட காலமாக மக்களின் வாகனமாக இருந்து வருகிறது. பஸ்கள் மற்றும் ஏனைய போக்குவரத்து வசதிகள் இல்லாத பகுதிகளில் இவை போக்குவரத்திற்கான முக்கிய வாகனமாக செயற்படுகின்றன. முச்சக்கர வண்டிகள் மில்லியன் கணக்கானோரின் போக்குவரத்தின் முதுகெலும்பாக திகழ்கின்றன. அவை நகரப்புறங்களில் பஸ்கள் அற்ற நேரங்களில் மிக முக்கிய பயண சேவையாக அமைகின்றன. நகரங்களில் இரவு நேர பயணத்திற்கு மாற்றீடாகவும், சுயதொழில்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கான ஆதாரமாகவும் பயன்படுகின்றன. கிராமங்களில் உயிர் காக்கும் அம்பியூலன்ஸ்களாக செயற்பட்டு நோயாளிகளையும் கர்ப்பிணிகளையும் வைத்தியசாலைக்கு கொண்டு சேர்க்கின்றது. சிறிய கிராமப்புற பாதைகளில் விவசாயப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனமாகவும் அது பயன்படுத்தப்படுகின்றது. 

இவையனைத்தையும் தாண்டி, பஜாஜ் முச்சக்கர வண்டிகள் இலங்கை கலாசாரத்தின் ஒரு அங்கமாக மாத்திரமின்றி, சுற்றுலா துறையிலும் முக்கிய பங்காற்றுகின்றன. மிக முக்கியமாக, சுமார் 50 இலட்சம் இலங்கையர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்பை இந்த வாகனங்கள் வழங்குகின்றன. சுயதொழில்களுக்கும் தொழில் முயற்சிகளுக்கும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறிய தொழில் முயற்சியாளர்களுக்கு உதவும் பஜாஜ் முச்சக்கர வண்டியானது, வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவும், வாடிக்கையாளர்களைச் சென்றடையவும், பொருட்களை கட்டுப்படியான விலையிலும் நம்பகமாகவும் கொண்டு செல்லவும் உதவுகிறது. 

புதிய பஜாஜ் முச்சக்கர வண்டியை நேரில் பார்வையிட ‘இந்திக பஜாஜ் என்டர்பிரைஸஸ், VP கட்டடம், வைத்தியசாலை வீதி, உடகம, எம்பிலிபிட்டிய’ எனும் முகவரிக்கு விஜயம் செய்யவும் அல்லது 071 258 4001 எனும் இலக்கத்திற்கு அழைக்கவும். 

மேலதிக தகவலுக்கு 011 4 700 600 எனும் DPMC உடனடித் தொலைபேசி இலக்கத்தை அழைக்கவும் அல்லது www.dpmco.com எனும் அதன் இணையத்தளத்தை பார்வையிடவும். 

டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி பற்றி: 

இலங்கையின் மிகப்பெரும் வாகன நிறுவனமாக விளங்கும் டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி பிரைவட் லிமிடட், கட்டுப்படியான வகையிலும், நம்பகத்தன்மையுடனும், சிக்கனத்தன்மையை முன்னிறுத்தி, பெருமளவான மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனமாக அறியப்படுகிறது. அது இலங்கையில் Bajaj மற்றும் KTM வாகனங்களின் ஏக விநியோகஸ்தராக செயற்படுகின்றது. அத்துடன் MRF, ATLAS, ORION டயர்களின் விநியோகஸ்தராகவும் செயற்படுகிறது. நாடெங்கிலுமான விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் வலையமைப்புடன் DPMC நிறுவனம், தரம் மற்றும் பெறுமதி ஆகியவற்றில் நீடித்த நம்பிக்கையை வழங்கி வருகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

Mobitel 1278