Header Logo

வணிகம்
‘தீவா நீலத் தாமரை தானம்’ நிகழ்வு மூலம் அநுராதபுரத்தில் பொசன் பௌர்ணமி தினத்தை நினைவுகூர்ந்த தீவா

Jun 18, 2025 - 12:18 PM -

0

‘தீவா நீலத் தாமரை தானம்’ நிகழ்வு மூலம் அநுராதபுரத்தில் பொசன் பௌர்ணமி தினத்தை நினைவுகூர்ந்த தீவா

Hemas Consumer Brands நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய சலவை வர்த்தகநாமமான 'தீவா' (Diva), புனித பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அநுராதபுரத்தில் 'தீவா நீலத் தாமரை மலர் தானம்' (தீவா நில் மானெல் மல் தன்சல) நிகழ்வை முன்னெடுத்திருந்தது. இந்நிகழ்வின் மூலம், ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் மற்றும் பக்தர்களுக்கு அநுராதபுரத்தின் புனித தலங்களில் நீலத் தாமரை மலரை அர்ப்பணிக்க ஒரு அரிய வாய்ப்பு வழங்கப்பட்டது. 

இலங்கையின் தேசிய மலரான நீலத் தாமரையானது, தூய்மை, ஆன்மிக ஒளி மற்றும் பக்தியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இந்த அடையாளத்தின் முக்கியத்துவத்தையும், பொசன் பௌர்ணமியின் புனிதத் தன்மையையும் உணர்ந்துள்ள தீவா, நீடித்த இலங்கை கலாசாரப் பாரம்பரியங்களை ஆழமாக புரிந்துகொண்டு, அதற்கு மரியாதை செய்யும் வகையில் தனது அர்ப்பணிப்பை மீண்டும் நிரூபித்தது. இந்த மலர் தானம் நிகழ்வின் ஊடாக பக்தர்கள், தங்களின் ஆன்மீக பரிசுத்த தன்மையைக் காண்பிக்கும் ஒரு உயர்ந்த செயல்பாட்டில் ஈடுபட வாய்ப்பைப் பெற்றனர். 

மேலும், தீவா ஃப்ரெஷ் வர்த்தகநாமத் தொகுப்பில் உள்ள அனைவராலும் விரும்பப்படும் தீவா ஃப்ரெஷ் பேர்பிள் லோட்டஸ் சலவைத் தூளின் தனித்துவத்தை கொண்டாடும் விதமாகவும் இந்த முயற்சி அமைந்தது. மக்களின் உள்நாட்டுப் பண்புடனான அன்றாட வாழ்க்கை, மதிப்பு, கலாசார சடங்குகளுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தும் வகையில் இந்த தயாரிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து Hemas Consumer Brands நிறுவனத்தின் வீட்டுப் பயன்பாட்டுப் பிரிவின் உதவி வர்த்தகநாம முகாமையாளர் பியூமி ராஜபக்ஷ தெரிவிக்கையில், “தீவா நீலத் தாமரை மலர் தானம்’ என்பது பாரம்பரியத்தையும், தர்மத்தையும் கொண்டாடும் ஒரு நிகழ்வாகும். இது நுகர்வோருடன் ஆன்மீக ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் நாம் நெருக்கமாக இணைவதற்கான ஒரு முயற்சியாகும். இது ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வு என்பதுடன் எமது வர்த்தகநாம நோக்கத்தை அடியொற்றியதாக உள்ளது. நுகர்வோரைப் புரிந்துகொண்டு, அவர்களது வாழ்க்கையுடன் இணைந்த தீர்வுகளை வழங்குவதே எமது நோக்கமாகும்.” என்றார். 

பக்தர்கள் மற்றும் யாத்திரிகர்கள் இந்த நிகழ்வை பெரிதும் பாராட்டினர். இம்மாதிரியான முயற்சிகள் மூலம், இலங்கை மக்களின் கலாசார மற்றும் உணர்வுச் சூழலில் தீவா தனது தாக்கத்தை தொடர்ந்தும் வலுப்படுத்தி வருகிறது. இதன் மூலம் மக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்ப தீர்வுகளை வழங்கும் தனது வாக்குறுதியை தீவா தொடர்ச்சியாக நிறைவேற்றி வருகிறது.

Comments
0

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

title