Header Logo
SLIC
மலையகம்
தலவாக்கலை லிந்துலை நகர சபை தேசிய மக்கள் சக்தி வசம்

Jun 18, 2025 - 06:39 PM

தலவாக்கலை லிந்துலை நகர சபை தேசிய மக்கள் சக்தி வசம்
Mobitel Inner 1278
EDEX Inner

தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உப தலைவர் தெரிவு இன்று (18) மாலை 3.30 மணியளவில் தலவாக்கலை லிந்துலை நகர சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

 

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் மலிதுவ லியனகே உபாலி, திறந்த வாக்கெடுப்பு மூலம் நகர சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் ரொசான் இராஜசேகர் சபையின் உப தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி சார்பாக மலிதுவ லியனகே உபாலி, மலையக மக்கள் முன்னணி சார்பாக தாளமுத்து சுதாகர் ஆகியோர் தலைவருக்காக போட்டியிட்டனர்.

 

இதில் திறந்த வாக்கெடுப்பிற்கு 6 வாக்குகள் கிடைக்கப்பெற்றதால், திறந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது. இரகசிய வாக்கெடுப்பிற்கு 5 வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்தது. இதில் ஆறு வாக்குகளை பெற்று சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட மலிதுவ லியனகே உபாலி தெரிவு செய்யப்பட்டார்.

 

எதிராக போட்டியிட்ட மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்  தாளமுத்து சுதாகர் 05 வாக்குகளே பெற்றுக்கொண்டார். இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் நடுநிலை வகித்தார்.

இதே இந்த நகர சபைக்கு உப தலைவர் தெரிவு செய்வதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ரொசான் இராஜசேகர், ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக பஹல விதானகே இஷார அனுருத்த மஞ்சநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர்.

 

இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ரொசான் இராஜசேகர் 06  வாக்குகளை பெற்று உப தலைவராக தெரிவானர். இவருக்கு எதிராக போட்டியிட்ட பஹல விதானகே இஷார அனுருத்த மஞ்சநாயக்க 05 வாக்குகளே வாக்குகளே பெற்றுக்கொண்டார்.


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278