Header Logo
SLIC
மலையகம்
இ.தொ.காவின் நுவரெலியா உள்ளூராட்சி மன்றத் தலைவர்களின் பதவிப் பிரமானம்

Jun 24, 2025 - 11:02 AM

இ.தொ.காவின் நுவரெலியா உள்ளூராட்சி மன்றத் தலைவர்களின் பதவிப் பிரமானம்
Mobitel Inner 1278
EDEX Inner

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சேவல் சின்னத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு நுவரெலியா மாவட்டம் நுவரெலியா மாநகர சபை, நுவரெலியா பிரதேச சபை, அக்கரபத்தனை பிரதேச சபை, கொட்டகலை பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் நேற்று (23) பதவிப் பிரமானம் செய்துக்கொண்டார்கள்.

இதன் அடிப்படையில் நேற்று நுவரெலியா மாநகர சபையின் பிரதி மேயராக இ.தொ.காவின் சிவன்ஜோதி யோகராஜ், நுவரெலியா பிரதேச சபை தவிசாளராக வேலு யோகராஜ், அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளராக ரதிதேவி, கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளராக ராஜமனி பிரசாத் ஆகியோர் உத்தியோகப்பூர்வமாக நேற்று தமது கடைமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், முன்னிலையில் பதவி ஏற்கும் பத்திரத்தில் கையெழுத்திட்டு, உள்ளூராட்சி மன்றம் செயலாளர்களிடம் பத்திரத்தை சமர்ப்பித்தார்கள்.

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச்செயலாளரும் தவிசாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், பிரதி தலைவர் கணபதி கனகராஜ், பிரதி தவிசாளர் ராஜதுரை, உள்ளூராட்சி மன்றம் செயலாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் இ.தொ.கா வின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278