Header Logo
SLIC
மலையகம்
கொத்மலை பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசம்

Jun 25, 2025 - 06:58 PM

கொத்மலை பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசம்
Mobitel Inner 1278
EDEX Inner

கொத்மலை பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு நேற்று (25) மதியம் 02 மணியளவில் கொத்மலை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித் குமார முரமுதலிகெதர, திறந்த வாக்கெடுப்பு மூலம் பிரதேச சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் சுப்பிரமணியம் சண்முகதாசன் சபையின் உப தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

கொத்மலை பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி சார்பாக அஜித் குமார முரமுதலிகெதர, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக திஸ்ஸ சம்பத் பண்டார ஆகியோர் தலைவருக்காக போட்டியிட்டனர்.

 

இதில் திறந்த வாக்கெடுப்பிற்கு 30 வாக்குகள் கிடைக்கப்பெற்றதால், திறந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில் 30 வாக்குகளை பெற்று சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித் குமார முரமுதலிகெதர தெரிவு செய்யப்பட்டார்.

 

எதிராக போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக திஸ்ஸ சம்பத் பண்டார  22 வாக்குகளே பெற்றுக்கொண்டார். இதில் சர்வஜன அதிகாரம் கட்சியின் மூன்று உறுப்பினர்கள் வாக்களிப்பில் இருந்து விலகிக் கொண்டனர்.

 

இதே இந்த சபைக்கு உப தலைவர் தெரிவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக சுப்பிரமணியம் சண்முகதாசன் பெயர் முன்மொழியப்பட்டது. அதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக சண்முகம் கமலதீபன் பெயர் முன்மொழியப்பட்டது. இதன்போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக சுப்பிரமணியம் சண்முகதாசன் 30 வாக்குகளை பெற்று சபையின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார். ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக சண்முகம் கமலதீபன் 22 வாக்குகளே பெற்றுக்கொண்டார். இதிலும், சர்வஜன அதிகாரம் கட்சியின் மூன்று உறுப்பினர்கள் வாக்களிப்பில் இருந்து விலகிக் கொண்டனர்.
 


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278