Header Logo
SLIC
மலையகம்
அம்பகமுவ பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தி வசம்

Jun 26, 2025 - 12:07 PM

அம்பகமுவ பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தி வசம்
Mobitel Inner 1278
EDEX Inner

திறந்த வாக்கெடுப்பின் மூலம் 11 வாக்குககளை பெற்று ஐக்கிய மக்கள் சத்தியின் உறுப்பினர் நாகந்தலகே தொன் கபில நாகந்தல அம்பகமுவ ளபிரதேச சபையின்  தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

 

அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான முதலாம் கன்னி அமர்வு மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எம்.கே.சி.கே அத்தபத்து  தலைமையில் இன்று (26) அம்பகமுவ பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

 

இதன் போது 21 உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிலையில் திறந்த வாக்கெடுப்பினூடாக தலைவர் தெரிவு இடம்பெற்றதுடன் உப தலைவர் தெரிவு இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டது.

 

இதன்போது பகிரங்க வாக்கெடுப்பினூடாக தலைவர் தெரிவு இடம்பெற்றதில் 11 வாக்குகளை பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாகந்தலாகே தொன் கபில நாகந்தல தலாவராக தெரிவு செய்யப்பட்டார்.

 

ஐக்கிய மக்கள் சத்தி உறுப்பினர்கள் 06, ஐக்கிய தேசிய கட்சி 01,  ஈரேஸ் ஜனநாயக முன்னணி 01, ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன 01, சர்வஜன அதிகாரம் 01, சுயேற்சைக்குழு 01  என  11 உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர்.

 

தேசிய மக்கள் சார்பில் அமரசிங்க வசந்த பிரியதர்சன போட்டியிட்ட நிலையில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் 08, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 02 வாக்குகள் என 10 வாக்குகளை பெற்றார்.

 

உப தவிசாளர் தெரிவிற்கு இரகசிய வாக்கெடுப்பிற்கு அதிக ஆதரவு கிடைத்த நிலையில் இரகசிய வாக்கெடுப்பில் சுயேட்சைக்குழு உறுப்பினர் விதான கமகே ஹெலப்பிரிய நந்தராஜ் தேசிய மக்கள் சார்பில் உடகெதரலாகே முதியான்சலாகே ஹரிந்த ஆசிரி உடகே ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

 

இதன் போது தேசிய மக்கள் சக்தின் உறுப்பினர் 12 வாக்குகளை பெற்று உப தலைவராக தெரிவானர்.

சுயேட்சைக்குழு உறுப்பினர் நர்ந்தராஜ் 07 வாக்குகளை பெற்றதுடன் இரண்டு வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக கணிக்கப்பட்டது.


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278