Jul 2, 2025 - 07:14 AM -
0
காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்கான தேவையான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் போது, போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருடனும் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்று டிரம்ப் தமது சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ள போதும், நிபந்தனைகள் என்ன என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
"அமைதியைக் கொண்டுவர மிகவும் கடினமாக உழைத்த கட்டார் மற்றும் எகிப்தியர்கள் இந்த இறுதி திட்டத்தை நிறைவேற்றுவார்கள். ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். இல்லை என்றால் இன்றும் அவர்களின் நிலை மோசமாகிவிடும்" என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் காசாவில் ஒரு இராணுவ நடவடிக்கையை தொடங்கிய நிலையில், சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், அதன் பின்னர் காசாவில் குறைந்தது 56,647 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சுஅறிவித்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.