உலகம்
எலான் மஸ்க் நாடு கடத்தப்படுவாரா? - டிரம்ப்பின் அதிர்ச்சி தகவல்

Jul 2, 2025 - 10:12 AM -

0

எலான் மஸ்க் நாடு கடத்தப்படுவாரா? - டிரம்ப்பின் அதிர்ச்சி தகவல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்துள்ள வரி மற்றும் செலவு சட்டமூலத்திற்கு உலக பணக்காரரான எலான் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். 

இதற்கிடையே இந்த சட்டமூலம் அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டதையடுத்து புதிய கட்சியை தொடங்குவேன் என்று எலான் மஸ்க் தெரிவித்தார். 

இதனையடுத்து எலான் மஸ்க் மீண்டும் தென் ஆப்பிரிக்காவிற்கே செல்ல வேண்டியிருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். 

இந்நிலையில், எலான் மஸ்க் நாடு கடத்தப்படுவாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், "மஸ்க்கை நாடு கடத்த முடியுமா எனத் தெரியாது. அதற்கான சாத்தியக் கூறுகளை பார்க்க வேண்டும். 

எலான் மஸ்கின் நிறுவனங்கள் தொடர்பாக DOGE அமைப்பை விசாரிக்கச் சொல்லலாம். நிறைய சலுகைகளை அவர் அனுபவித்து வருகிறார்" என்று தெரிவித்தார். 

அமெரிக்க அரசின் செலவினத்தை குறைக்க மஸ்க் தலைமையில் DOGE அமைப்பு தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த மே மாதம் அந்த அமைப்பில் இருந்து மஸ்க் வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05