Jul 3, 2025 - 08:24 AM -
0
இந்தோனேசிய பாலி தீவு அருகே 65 பேரை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நான்கு பேர் உயிரிழந்ததோடு, 38 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மேலும், குறித்த நீரில் மூழ்கிய படகிலிருந்து 23 பேர் காப்பாற்றப்பட்டதாக தேடல் மற்றும் மீட்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கிழக்கு ஜாவா மாகாணத்தின் பன்யுவாங்கி துறைமுகத்திலிருந்து பாலிக்கு புறப்பட்ட கப்பல் சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு மூழ்கியதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
படகில் 53 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் மற்றும் 22 வாகனங்கள் இருந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இருப்பினும் பலத்த நீரோட்டம் மற்றும் காற்று காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருகலாம் என அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
17,000இற்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் படகுகள் ஒரு பொதுவான போக்குவரத்து முறையாகும், மேலும் போதுமான உயிர்காக்கும் உபகரணங்கள் இல்லாமல் கப்பல்கள் அதிக சுமையுடன் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிப்பது விபத்துக்களுக்கு காரணமாக அமைவதாக தெரிவிக்கப்படுகிறது.