உலகம்
டெக்சாஸில் வரலாறு காணாத வெள்ளம் - பலி எண்ணிக்கை 82ஆக உயர்வு

Jul 7, 2025 - 11:44 AM -

0

டெக்சாஸில் வரலாறு காணாத வெள்ளம் - பலி எண்ணிக்கை 82ஆக உயர்வு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் திடீர் கனமழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளதோடு, 40 பேர் காணாமல் போயுள்ளனர். 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான் ஆன்டனியோ அருகே உள்ள மலைப்பகுதி கெர்ர்வில். இந்த நகருக்கு அருகே குவாடலுாப் ஆறு ஓடுகிறது. கடந்த 4ஆம் திகதி குறித்த பகுதியில் வரலாறு காணாத கனமழை பெய்தது. 

இதனால் குவாடலுாப் ஆற்றின் நீர்மட்டம் 45 நிமிடங்களில் 26 அடி உயர்ந்தது. 1987ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தை விடவும் இம்முறை ஏற்பட்ட வௌ்ளம் அதிகமென தெரிவிக்கப்படுகிறது. 

குவாடலுாப் ஆற்றங்கரையில் அமைந்த மிஸ்டிக் என்ற சிறுமியருக்கான கிறிஸ்தவ கோடைகால முகாமுக்குள் வெள்ள நீர் பாய்ந்தது. 

இங்கு தங்கியிருந்த சுமார் 700இற்கும் மேற்பட்டோரில் பெரும்பாலானவர்கள் மீட்கப்பட்டனர். 

முகாமில் தங்கியிருந்த 27 சிறுமியரை காணவில்லை. இதனால் பெற்றோர் பரிதவித்துள்ளனர். தங்கள் குழந்தைகளின் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மீட்க உதவி கேட்டு வருகின்றனர்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05