Header Logo
SLIC
ஜோதிடம்
இன்றைய ராசி பலன் (09.07.2025)

Jul 9, 2025 - 09:05 AM

இன்றைய ராசி பலன் (09.07.2025)
Mobitel Inner 1278
EDEX Inner

இன்று (09) புதன் கிரகத்தின் ஆதிக்கம் உள்ள நாள். இவர் தனுசு ராசியில் மூலம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று மரண யோகம் கூடிய தினம். இன்று குரு சந்திரன் சப்தக யோகத்தை உருவாக்குகின்றனர். இன்று மேஷம், ரிஷப ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் உள்ளது. விநாயகரின் அருளால் மிதுனம் உட்பட 5 ராசிக்கு குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். தடைகள் நீங்கும்.

 

மேஷம் ராசி பலன்

 

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். வேலையில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். சில நாட்களாக இருந்த பிரச்னைகள் தீரும். மற்றவர்களின் வேலையைப் பற்றி அதிகம் கவலைப்படுவீர்கள். அதை விடுத்து உங்கள் வேலைகளில் கண்ணும் கருத்துமான செயல்படவும். ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களுடன் எங்காவது வெளியே செல்ல திட்டமிடுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சட்ட பிரச்னைகளில் நல்ல செய்தி கிடைக்கும்.

 

ரிஷபம் ராசி பலன்

 

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையின்படி நடப்பதால் நல்ல பெயர் கிடைக்கும். குழந்தைகளிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கும். எதிர்பாராத லாபங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் யாருடனும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். பயணத்தின்போது கவனமாக வாகனம் ஓட்டுங்கள். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதுடன், குடும்பத்தினரின் ஆலோசனைகளையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

 

மிதுனம் ராசி பலன்

 

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று திருமண வாழ்க்கையில் இனிமை இருக்கும். தைரியம் அதிகரிக்கும். தலைமைப் பண்பு அதிகரிக்கும். வேலையில் பெரிய சாதனை கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் பெரிய லாபத்தை எதிர்நோக்கி வாய்ப்புகளை இழக்க வேண்டாம். பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது. இல்லையெனில், சிக்கலை சந்திக்க நேரிடும். பெற்றோருடன் வாக்குவாதம் ஏற்படலாம். அவர்களை அனுசரித்து செல்லவும்.

 

கடகம் ராசி பலன்

 

கடக ராசிக்காரர்களுக்கு இன்று கடின உழைப்பு தேவைப்படும். பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருங்கள். கடன், முதலீடு தொடர்பாக யாராவது உங்களை ஏமாற்றலாம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரிகளின் மனதை வெல்வார்கள். உங்கள் பேச்சு மற்றும் செயல்பாடுகளால் அனைவரையும் ஒன்றிணைப்பீர்கள். பேராசையால் பெரிய லாபத்திற்காக அதிக பணம் முதலீடு செய்ய வேண்டாம். நிபுணர்களின் ஆலோசனைக்கு பின்னர் பணம் முதலீடு செய்ய திட்டமிடவும். தாய்வழி உறவினர்களால் நிதி ஆதாயம் கிடைக்கும்.

 

சிம்மம் ராசி பலன்

 

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மற்ற நாட்களை விட சிறப்பான பலன் கிடைக்கும். வேலையில் கவனமாக இருக்க வேண்டும். எந்த வேலையையும் இளைய ஊழியர்களிடம் ஒப்படைத்தால் பெரிய தவறு நடக்க வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் இருப்பவர்கள் தங்கள் துணையின் செல்வாக்கின் கீழ் பெரிய முதலீடு செய்தால் நஷ்டம் ஏற்படலாம். உங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவும். உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்கவும். உங்கள் அன்றாட வேலைகளில் சில மாற்றங்களைச் செய்தால் அது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

 

கன்னி ராசி பலன்

 

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று விவேகத்துடனும் முடிவுகளை எடுக்க வேண்டிய நாள். வதந்திகளை நம்புவதை தவிர்க்கவும். இல்லையெனில், தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். உங்கள் அனுபவத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்வீர்கள். மூத்த அதிகாரிகள் உங்களிடம் சில வேலைகளை ஒப்படைத்தால் அதை சரியான நேரத்தில் முடிக்க முயலவும். உங்களின் பழைய தவறுகள் வெளிவரலாம். மாணவர்கள் தங்கள் படிப்பு தொடர்பான முயற்சிகளுக்கு நல்ல பலனும், நிவாரணம் கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் பணம் வரும். உங்கள் நிதி நிலைமை வலுவாக இருக்கும்.

 

துலாம் ராசி பலன்

 

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சாதகமான நாள். உங்கள் தைரியம் அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. இது மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கும். அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சிப்பீர்கள். அசையும் அல்லது அசையா சொத்து தொடர்பான ஏதேனும் தகராறு இருந்தால் அதில் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்கள் திறமை அனைவரின் முன்னிலையிலும் வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு இன்று நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

 

விருச்சிகம் ராசி பலன்

 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றமான நாள். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நெருங்கியவர்களுடன் உங்கள் தொடர்பை அதிகரிப்பதில் வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர் சொன்ன ஒரு விஷயத்தை நினைத்து நீங்கள் வருத்தப்பட வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் உங்கள் இனிய பேச்சால் அனைவரின் மனதையும் வெல்வீர்கள். உங்கள் துணையுடன் அன்பான தருணங்களை செலவிடுவீர்கள். உங்கள் குடும்ப விஷயங்களில் எந்த வெளி நபரின் ஆலோசனையையும் எடுக்க வேண்டாம்.

 

தனுசு ராசி பலன்

 

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாள். புதிய தொடர்புகளால் நன்மை அடைவீர்கள். இரத்த உறவுகள் வலுவடையும். ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும். செல்வாக்கு மிக்க சில நபர்களை சந்திப்பீர்கள். உங்கள் வியாபாரத்தில் சில புதிய திட்டங்களைத் தொடங்க வெற்றி கிடைக்கும். உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலை இனிமையாக இருக்கும். அடுத்தடுத்து நல்ல செய்திகள் உங்களை தேடி வரும்.

 

மகரம் ராசி பலன்

 

மகர ராசிக்காரர்களுக்கு இன்று முக்கியமான வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க வேண்டிய நாள். சமூகம், தொண்டுப் பணிகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். எந்த வேலையையும் அவசர அவசரமாக செய்ய வேண்டாம். இன்று பொறுப்புடன் நிதானமாக செய்ல்படுவது நல்லது. மோசடி செய்பவர்களிடமும், வேலையில் உங்கள் எதிரிகளிடமும் கவனமாக இருக்கவும். இல்லையெனில், அவர்கள் உங்கள் வேலையில் தடைகளை உருவாகவும், நஷ்டம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. உங்கள் முதலீடு தொடர்பான சில திட்டங்கள் இன்று தடைபடலாம். மாணவர்கள் படிப்பு தொடர்பாக மன அழுத்தத்திலிருந்து விடுபடுவார்கள்.

 

கும்பம் ராசி பலன்

 

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நிதி ரீதியாக நல்ல நாள். பெரிய சாதனையால் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். உங்கள் சுயமரியாதை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பிறரிடம் சிக்கியிருந்த பணம் திரும்ப கிடைப்பதால் உங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. உங்கள் செல்வம் அதிகரிப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வணிக நடவடிக்கைகளும் மேம்படும்.

 

மீனம் ராசி பலன்

 

மீன ராசிக்காரர்களுக்கு இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் மந்தநிலை மாறி இன்று நல்ல லாபம் கிடைக்கும். மூதாதையர் சொத்து சம்பந்தமாக வழக்கு விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் உங்கள் அனுபவத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்வீர்கள். யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். உங்களுக்கு முன் நடக்கக்கூடிய சர்ச்சைக்குரிய சூழ்நிலைகளிலிருந்து விலகி இருக்கவும். அமைதியை கடைப்பிடிக்கவும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

Mobitel 1278