Jul 13, 2025 - 08:14 AM -
0
சென்னை துறைமுகத்திலிருந்து எரிபொருளை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் அருகே உள்ள பொதுக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
அரக்கோணத்தில் இருந்து சென்னை வரும் அனைத்து மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தீ விபத்து ஏற்பட்ட சரக்கு ரயிலில் 52 பெட்டிகள் உள்ளன.
சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு யாரும் வரவேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.