உலகம்
இங்கிலாந்தில் மகாத்மா காந்தியின் ஓவியம் 1.7 கோடி ரூபாவுக்கு ஏலம்

Jul 16, 2025 - 05:11 PM -

0

இங்கிலாந்தில் மகாத்மா காந்தியின் ஓவியம் 1.7 கோடி ரூபாவுக்கு ஏலம்

மகாத்மா காந்தி கடந்த 1931ஆம் ஆண்டு இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள இங்கிலாந்தின் லண்டனுக்குச் சென்ற போது அவரை பிரித்தானிய கலைஞர் கிளேர் லெய்டன் சந்தித்தார். 

அப்போது அவர் ஓவியம் வரைவதற்காக காந்தி போஸ் கொடுத்தார். இந்த ஓவியம் 1974ஆம் ஆண்டு பொதுக் காட்சிக்கு வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், தற்போது மகாத்மா காந்தியின் ஓவியம் ஏலம் விடப்பட்டது. 

போன்ஹாம்ஸில் நடந்த இணையவழி (Online) ஏலத்தில் காந்தி ஓவியம் ரூ.1.7 கோடி ரூபாவுக்கு (இந்திய பெறுமதி) விற்பனையானது. 

நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் 3 மடங்கிற்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் ஓவியருக்கு போஸ் கொடுத்தது இந்த நிகழ்வு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05