Header Logo

உலகம்
நடுவானில் திடீரென தீப்பிடித்து எரிந்த விமான எஞ்சின்

Jul 20, 2025 - 01:04 PM -

0

நடுவானில் திடீரென தீப்பிடித்து எரிந்த விமான எஞ்சின்

அமெரிக்காவில் நேற்று (19) லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டா நோக்கி டெல்டா ஏர் லைன்ஸ் உடைய போயிங் 767 - 400 ரக பயணிகள் விமானம் புறப்பட்டது.

ஆனால் டேக்-ஆஃப் ஆனதும் அதன் இடது எஞ்சினில் தீப்பிடித்ததால், மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸிலேயே அவசரமாகத் தரையிறங்கியது.

விமானி அவசரநிலையை அறிவித்ததையடுத்து, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறை, விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்ப வழிகாட்டியது. தரையிறங்கியதும் தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு டெல்டா விமானத்தில் எஞ்சின் தீப்பிடிப்பது இது இரண்டாவது முறை. கடந்த ஏப்ரல் மாதமும் ஆர்லாண்டோ விமான நிலையத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

Comments
0

MOST READ

காணொளி
வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

title