Header Logo
Mogo Academy

உலகம்
ரஷியாவில் மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதறியது

Jul 31, 2025 - 12:33 PM -

0

ரஷியாவில் மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதறியது
Mobitel inner

ரஷியாவின் கம்சட்கா தீபகற்ப பகுதியில் நேற்று (30) காலை அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 8.8 ஆக பதிவானது.

இதையடுத்து அப்பகுதியை சுனாமி அலைகள் தாக்கியது. மேலும் ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் அலாஸ்கா, ஹவாய் ஆகியவற்றை சுனாமி தாக்கியது. பசிபிக் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

இந்த நிலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷியாவின் மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதற தொடங்கி உள்ளது. 

நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரத்துக்கு பிறகு கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள 15,000 அடி உயரம் கொண்ட க்ளூச் செவ்ஸ்காய் எரிமலை வெடித்து சிதறியது. அதில் இருந்து தீப்பிழம்புகள் வெளியேறி வருகின்றன. இந்த எரிமலை வெடிப்பை ரஷிய அறிவியல் கழகத்தின் யுனைடெட் புவி இயற்பியல் சேவை உறுதி செய்துள்ளது.

இதற்கிடையே அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட பெரிய சுனாமி அச்சுறுத்தல் முற்றிலும் கடந்துவிட்டதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் தெரிவித்தார். ஆனாலும் வடக்கு கலிபோர்னியா கடற்கரையின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை அமலில் உள்ளது.

சிலி நாடு தனது பசிபிக் கடற்கரையின் பெரும் பகுதிக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையை நீட்டித்து உள்ளது. இந்த நிலையில் பசிபிக் கடல் பகுதியில் மேலும் நில நடுக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara