Header Logo
SLIC
மலையகம்
மது போதையில் இ.போ.ச பஸ்ஸை செலுத்திய சாரதிக்கு விளக்கமறியல்!

Aug 4, 2025 - 05:58 PM

மது போதையில் இ.போ.ச பஸ்ஸை செலுத்திய சாரதிக்கு விளக்கமறியல்!
Mobitel Inner 1278
EDEX Inner

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை குடிபோதையில் ஓட்டி சென்ற சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோத மது போதையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி ஒருவரை நேற்று (03) நுவரெலியா பொலிஸாரால் சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் சோதனை சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

திவுலபிட்டி டிப்போக்கு சொந்தமான குறித்த பேருந்து வெளிமடையிலிருந்து நுவரெலியா வழியாக மீகமுவ நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், குறித்த சாரதி சட்டவிரோத குடிபோதையில் வாகனத்தை செலுத்தியமையும், பஸ்ஸில் சாரதி இருக்கையில் பின்புறம் 750 மில்லி லிட்டர் சட்டவிரோத மதுபானத்தை தன்வசம் வைத்திருந்தமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே சாரதியை இன்று (04) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்திய போது குறித்த சாரதியை எதிர்வரும் (18) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278