Header Logo
SLIC
மலையகம்
லிந்துலையில் குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி

Aug 5, 2025 - 11:14 AM

லிந்துலையில் குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி
Mobitel Inner 1278
EDEX Inner

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை லோகி தோட்டத்தில் உள்ள குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (04) மாலை இடம்பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

உடப்புசல்லாவ எனிக் தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதான அருமைவாசகம் கமலராஜா என்பவரே உயிரிழந்தவராவாரென அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் உடப்புசல்லாவ பகுதியில் இருந்து தலவாக்கலை பகுதியில் உள்ள ஒரு கடையில் தொழில் புரிந்து வந்தவர் எனவும் நேற்று லிந்துலை லோகி தோட்டத்தில் உள்ள நான்கு நண்பர்களுடன் குளிக்க வருகை தந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போதே குறித்த நபர் நீரில் மூழ்கிக் காணாமல் போயிருந்த நிலையில் குறித்த இளைஞனை ஏனையவர்கள் காப்பாற்ற முயற்சித்த போதும் முயற்சி பயனளிக்காத நிலையில் மேற்படி இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து நேற்று மாலை வேளையில் லிந்துலை பொலிஸாரும், பிரதேச மக்களும் இணைந்து குறித்த இளைஞனின் சடலத்தை குளத்தில் இருந்து மீட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு, பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278