Header Logo
Mogo Academy

விளையாட்டு
இரண்டாவது T20 போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி

Aug 12, 2025 - 07:38 PM -

0

இரண்டாவது T20 போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி
Mobitel inner

அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே Darwin மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது T20 போட்டியில் தென்னாபிரிக்க அணி 53 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றது. 

தென்னாபிரிக்க அணி சார்பாக அபாரமாக துடுப்பெடுத்தாடிய டிவால்ட் பிரெவிஸ் 56 பந்துகளில் அபாரமாக துடுப்பெடுத்தாடி 125 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். 

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் க்ளென் மெக்ஸ்வெல் மற்றும் Ben Dwarshuis ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர். 

பின்னர், 219 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 17.4 ஓவர்களில் 165 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது. 

அவுஸ்திரேலிய அணி சார்பாக டிம் டேவிட் 50 ஓட்டங்களையும் எலெக்ஸ் கெரி 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

தென்னாபிரிக்கா சார்பில் Kwena Maphaka மற்றும் Corbin Bosch ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர். 

தென்னாபிரிக்க அணியின் இந்த வெற்றியின் ஊடாக 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளது.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara