Header Logo

உலகம்
தென்கொரிய முன்னாள் முதற் பெண்மணி கைதானார்

Aug 13, 2025 - 01:32 PM -

0

 தென்கொரிய முன்னாள் முதற் பெண்மணி கைதானார்

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

கிம் கியோனுக்கு எதிராக பங்குச் சந்தை மோசடி, தேர்தல் தலையீடு, இலஞ்ச முறைப்பாடு உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், அவர் வெளியில் இருந்தால் சாட்சியங்களை கலைக்க நேரிடும் என பொலிஸ் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்றுக்கொண்ட சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் அவரை கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பித்தது. 

தென்கொரியாவில் எதிர்க்கட்சியினர் வடகொரியாவுடன் இணைந்து பாராளுமன்றத்தை முடக்க சதித்திட்டம் தீட்டுவதாகக் கூறி, ஜனாதிபதி யூன் சுக் இயோல் கடந்த டிசம்பர் மாதத்தில் இராணுவ அவசர நிலையை அறிவித்தார். 

இராணுவ அவசர நிலைக்கு, நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியதால், சில மணி நேரங்களில் அந்த உத்தரவு மீளப் பெறப்பட்டது. 

இதனிடையே, இராணுவ அவசர நிலை உத்தரவு என்பது கிளர்ச்சிக்கு சமமானது என்று யூன் சுக் மீது பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார். 

தென் கொரிய வரலாற்றில் ஜனாதிபதியாக இருப்பவர் கைது செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும். இந்த நிலையில், அவரது மனைவியும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!