Header Logo
SLIC
மலையகம்
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை

Aug 28, 2025 - 01:27 PM

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை
Mobitel Inner 1278
EDEX Inner

இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை செயல்படுத்துவதாக அறிவித்த போதிலும், நேற்று (27) நள்ளிரவு முதல் நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்குகிறது.

மேலும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் நுவரெலியா டிப்போவில் எவரும் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளனர். இதனால் பேருந்து சேவை பாதிக்கப்படாது எனவும் வழக்கமான நேர அட்டவணையின் கீழ் அரச பேருந்துகள் இயக்கப்படும் எனவும் நுவரெலியா போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவில் பணியில் ஈடுபடும் அதிகாரி ஒருவர் இன்று (28) தெரிவித்தார்.

மேலும் எந்தவித இடையூறும் இல்லாமல் வழக்கம் போல சேவை இடம்பெற்று வருகிறது இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

தனியார் பேருந்துகளுடன் கூட்டு நேர அட்டவணையில் பேருந்துகளை இயக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278