பல்சுவை
வீடியோ வெளியிட்ட ஜாய் கிரிசில்டா!

Aug 31, 2025 - 04:22 PM -

0

வீடியோ வெளியிட்ட ஜாய் கிரிசில்டா!

தமிழ் சினிமா மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா தம்பதியருக்கான சர்ச்சை மேலும் தீவிரமடைந்துள்ளது. 

சமீபத்தில் பொலிஸில் புகார் அளித்த ஜாய் கிரிசில்டா, தனது கணவரான மாதம்பட்டி ரங்கராஜின் பழைய வீடியோவை சமூக வலைதளத்தில் ஷேர் செய்து, அவரது துரோகக் தன்மையை வெளிப்படுத்தியுள்ளார். 

இந்த வீடியோவும் அதன் கேப்ஷனும் நெட்டிசன்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜாய் கிரிசில்டா ஷேர் செய்த வீடியோவில், மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியுடன் பேசும் காட்சி பதிவாகியுள்ளது. 

வீடியோவில் ரங்கராஜ், 'ஓய் என்னடி பண்ற பொண்டாட்டி மிஸ் யூ லவ் யூ' என்று ஆரம்பித்து, 'வீட்டுக்கு போய் சாப்பிட்டுட்டு குளிச்சிட்டு டிரஸ் மாத்திட்டு வந்துட்டேன். இன்டர்வியூ முடிஞ்சிருச்சு இப்ப 4 கிளாக் அங்க மீட்டிங் இருக்கு 3:30க்கு கிளம்புறேன். காபி குடிச்சேன். மிஸ் யூ லவ் யூ. டாட்டா' என்று அன்பாக பேசுகிறார். 

இந்த வீடியோ, ரங்கராஜின் முதல் மனைவியான சுருத்தியுடன் அவரது உறவை பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது. 

இந்த வீடியோவை ஷேர் செய்த ஜாய் கிரிசில்டா, கேப்ஷனில், "கணவரும் என் குழந்தைகளோட அப்பா அளப்பரைகள், தன்னோட குழந்தையை சுமக்குற ஒரு பெண்ணுக்கு துரோகம் பண்றவன் யாருக்கு வேணாலும் துரோகம் பண்ணுவான்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார். 

நெட்டிசன்கள் இதை ரங்கராஜின் முதல் மனைவி சுருத்தியை எச்சரிக்கும் வகையில் பார்க்கின்றனர். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி, ஆயிரக்கணக்கான லைக்ஸ், ரீபோஸ்ட்கள் மற்றும் கமெண்ட்களைப் பெற்றுள்ளது. 

சமீபத்தில், ஜாய் கிரிசில்டா சென்னை காவல் துறையில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்திருந்தார். புகாரின்படி, ரங்கராஜ் தனது முதல் மனைவியுடன் ஜூடிஷியல் செப்பரேஷனில் (நீதிமன்ற இடைவேலி பிரிவு) இருக்கிறதாக சொல்லி, ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகக் தெரிவிக்கப்படுகிறது. 

திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆனதாகவும், இது தவறான தகவல் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும், கர்ப்ப காலத்தில் கருவை கலைக்க சொல்லி வற்புறுத்தியதாகவும், நேரடியாக பேச முயன்றபோது இரண்டு முறை தன்னை அடித்ததாகவும் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார். 

இருப்பினும், அவர் தனது கருத்தை தெளிவாக வெளிப்படுத்தி, "மாதம்பட்டி ரங்கராஜ் கூட சேர்ந்து வாழதான் என்னோட விருப்பம். அப்படின்னும் அவர்தான் இந்த குழந்தைக்கு அப்பா, என்னோட கணவர் அவர்தான்" என்று ஆதங்கமாக பேசியுள்ளார். 

இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, காவல் துறை ரங்கராஜ் மீது விசாரணை நடத்தி வருகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05