Header Logo
SLIC
கிழக்கு
மனிதகுலத்திற்கு ஒளியூட்டிய நபிகளாரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவோம்

Sep 5, 2025 - 11:09 AM

மனிதகுலத்திற்கு ஒளியூட்டிய நபிகளாரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவோம்
Mobitel Inner 1278
EDEX Inner

எமது இறைத் தூதரான நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) பிறந்த நாளான மீலாதுன் நபி தினத்தில், உலகெங்கும் வாழும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும், குறிப்பாக இலங்கையிலுள்ள எம் அன்பு மக்களுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்த வரலாறு, மனிதகுலத்திற்கு வழிகாட்டும் ஒரு சிறந்த முன்மாதிரியாகும். அவர் வாழ்வின் ஒவ்வொரு தருணமும் அன்பு, நம்பிக்கை, சகிப்புத் தன்மை, நீதி மற்றும் சமூக ஒற்றுமை ஆகிய பண்புகளால் நிரம்பியிருந்தது. சமுதாயத்தில் வறியவர்களுக்கு அக்கறை காட்டுதல், அநீதியால் வாடுவோருக்காக குரல் கொடுப்பது, அன்பும் நட்பும் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து காட்டியது தான் நபிகளாரின் மகத்தான வழிகாட்டுதலாகும். 

இன்றைய உலகம் பல்வேறு சவால்களையும் சிக்கல்களையும் எதிர்கொள்ளும் நேரத்தில், நபிகளாரின் நட்பண்புகளை மீண்டும் நினைவுகூர்ந்து செயல்படுதல் என்பது மிகுந்த அவசியமாகிறது. மதம், இன வேறுபாடுகளை தாண்டி அனைவரும் ஒன்றுபட்டு சமூக ஒற்றுமை, சகோதரத்துவம், சமாதானம் ஆகியவற்றை நிலைநிறுத்த வேண்டும். 

இந்த புனித நாளில், உலகம் முழுவதும் அமைதியும் நிம்மதியும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். குறிப்பாக, பல துயரங்களையும் அநீதிகளையும் எதிர்கொண்டு வரும் பலஸ்தீன் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, அவர்கள் வாழ்வில் நீதி, சுதந்திரம் மற்றும் அமைதி நிலவவேண்டும் என அல்லாஹ்விடம் பிராத்திப்போம்.

MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278