Header Logo
Mogo Academy

உலகம்
ரஷியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Sep 13, 2025 - 10:24 AM -

0

ரஷியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
Mobitel inner

ரஷியாவின் கிழக்கில் உள்ள கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் இன்று (13) காலை 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

7.4 ரிக்டர் அளவில், 39.5 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கம் 7.1 ரிக்டர் அளவில் இருந்ததாக பதிவு செய்துள்ளது. 

கம்சட்காவில் சில பகுதிகளில் 4 மீட்டர் உயரம் வரை அலைகள் எழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதனால் செவெரோ, குரில்ஸ்க் உள்ளிட்ட கடலோர நகரங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 

கம்சட்காவுக்கு தென்மேற்கில் அமைந்துள்ள ஜப்பானுக்கு இதுவரை எந்த சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. 

கடந்த ஜூலை மாதத்தில் இதே பகுதியில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. அப்போது ஜப்பான், அமெரிக்கா மற்றும் பசிபிக் தீவு நாடுகளான ஹவாய், சிலி, கோஸ்டாரிகா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

MOST READ

காணொளி
அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

Mobitel Upahara