Header Logo

பல்சுவை
'ரேபிஸ்' தாக்கி ஒருவர் பலி!

Sep 15, 2025 - 12:31 PM -

0

'ரேபிஸ்' தாக்கி ஒருவர் பலி!

இந்தியாவின் ஐஸ் ஹவுஸ் பகுதியில் ஜூலையில் வெறி நாய்க்கடி பாதிப்புக்கு உள்ளான நபர், 'ரேபிஸ்' நோய் தாக்கியதில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (13) உயிரிழந்தார். 

சென்னையில் நாய்க்கடியால் ஒருவர் உயிரிழந்த சம்பவம், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐஸ்ஹவுஸில் டாக்டர் பெசன்ட் வீதியில் வசித்தவர் முகமது நஸ்ருதீன், 50. ஆட்டோ ஓட்டுநரான இவர், ஐஸ்ஹவுஸ் சந்தை பகுதியில் ஜூலை மாதம் நடந்து சென்றார். 

அப்போது, தெருநாய் ஒன்று முகமது நஸ்ருதீனின் முழங்காலில் கடித்தது, உடனடியாக ராயப்பேட்டை அரசு வைத்தியசாலையில் சிகிச்சை மற்றும் தடுப்பூசி போட்டு வீடு திரும்பினார். இதன்பின், கடந்த 12 ஆம் திகதி, முகமது நஸ்ருதீனுக்கு தீவிர காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, ராயப்பேட்டை அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

மாற்றம் சிகிச்சையின் போது, அவருக்கு ரேபிஸ் நோய் பாதிப்பிற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டதால், ராஜிவ்காந்தி அரச வைத்தியசாலையில் மாற்றப்பட்டார். 

அங்கு தனி அறையில் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். தெருநாய் கடித்து, ஆட்டோ ஓட்டுநர் ரேபிஸ் பாதித்து உயிரிழந்திருப்பது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title