Header Logo
SLIC
ஜோதிடம்
இன்றைய ராசிப்பலன் (28.09.2025)

Sep 28, 2025 - 08:56 AM

இன்றைய ராசிப்பலன் (28.09.2025)
Mobitel Inner 1278
EDEX Inner

இன்று (28) புரட்டாசி மாதம் 12ம் நாள், சந்திரன் விருச்சிக ராசியில் பயணிக்கிறார். இன்று மரண யோகம் உள்ள தினத்தில், மேஷ ராசியில் உள்ள அஸ்வினி, பரணி நட்சத்திரத்திற்குச் சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். 

மேஷம்: 

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். 

குடும்பத்தில் உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்றாலும் பெரிதாக பாதிப்பு எதுவும் இருக்காது. 

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். 

ரிஷபம்: 

உற்சாகமான நாள். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரும். 

வயிறு தொடர்பான பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதால், வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகக்கூடும். 

மாலையில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். 

மிதுனம்: 

இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். 

அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். 

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். 

கடகம்: 

அனுகூலமான நாளாக இருக்கும்.அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியக்கூடும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். 

வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வேலை விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். 

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆனால், சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். 

சிம்மம்: 

உற்சாகமான நாள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். 

கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால், மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால், வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம். 

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்பட வாய்ப்பு உண்டு. 

கன்னி: 

மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. இன்று குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். 

சிலருக்கு குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். 

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. 

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். 

துலாம்: 

சாதிக்கும் நாளாக அமையும். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். 

பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். 

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். 

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. 

விருச்சிகம்: 

புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். 

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முக்கிய முடிவு எடுப்ப தற்கு உகந்த நாள். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். 

நண்பர்களிடம் எதிர் பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். 

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். 

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கொடுத்த கடன் தொகை கிடைக்கக் கூடும். 

தனுசு: 

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். 

குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. 

பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். 

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். 

மகரம்: 

புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும். 

உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக வெளியில் அலையவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். 

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். 

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்கள் முடிவதில் தடை, தாமதம் ஏற்படும். 

கும்பம்: 

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். கணவன் - மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். 

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிக ரிக்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. அலுவலகத்தில் சக ஊழியர்களின் பணிகளையும் நீங்களே செய்யவேண்டி வரும். 

அதனால் அசதி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். 

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். 

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். 

மீனம்: 

எடுத்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சி சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவர வுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். 

உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டா லும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். லாபம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக்கும். 

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

Mobitel 1278